ஆட்சியில் பங்கு தர தயார் என்றால் திமுக.வுடன் கூட்டணிக்குத் தயார்: காங். தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சூசகம்

ஆட்சியில் பங்கு தர தயார் என்றால் திமுக.வுடன் கூட்டணிக்குத் தயார்: காங். தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சூசகம்
Updated on
1 min read

காங்கிரஸ் மீது நாற்காலியைப் போட்டு ஆட்சி செய்வதை இனியும் அனுமதிக்க மாட்டோம். ஆட்சியில் சமபங்கை கேட்டு வாங்குவோம் என காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.

மதுரையில் 3 மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வரும் ஜூலை 23-ம் தேதி திருச்சியில் ராகுல் காந்தி பேசும் கூட்டத்தில் திரளாக பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

இதில் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியது: நம்மை விட்டு பிரிந்தவர்கள் மீண்டும் சேருவதற்கான நல்ல வாய்ப்புதான் திருச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கும் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர் தலில் உயிரைக் கொடுத்தாவது கவுரவமான இடத்தை நாம் பெறுவோம். காங்கிரஸ் மீது நாற்காலியைப் போட்டு ஆட்சி செய்ய இனியும் அனுமதிக்க மாட்டோம். உங்களுக்கு ஒரு நாற்காலி எனில், அருகில் எங்களுக் கும் ஒரு நாற்காலி. உங்களுக்கு முதல்வர் பதவி என்றால், எங்க ளுக்கு துணை முதல்வர் பதவி. நிதித்துறை உங்களுக்கு எனில் காவல்துறை எங்களுக்கு என்ற நிலைதான் இனி இருக்கும் என் றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறுகையில், ‘தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, ஒடுக் கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திமுகவும், காங் கிரஸும் சிறந்த பணியை ஆற்று கின்றன.

தேர்தல் நேரத்தில் கட்சி களிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளது’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in