

சென்னை
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்த வி.கே.தஹில் ரமானியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டுள்ளார். உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி வினீத் கோத்தாரியை நியமித்து உத்தர விட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்த விஜய கம்லேஷ் தஹில் ரமானியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்யவும், மேகாலயாவில் பணி புரியும் ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி யாக நியமிக்கவும் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்தது. இந்த இடமாற்றத்தை மறுபரி சீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமானி விடுத்த கோரிக் கையை உச்ச நீதிமன்ற கொலீ ஜியம் நிராகரித்தது.
இதையடுத்து வி.கே.தஹில் ரமானி கடந்த செப்.6-ம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை தற்போது ஏற்றுள்ள குடியரசுத் தலைவர், சென்னை உயர் நீதிமன் றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி யாக சென்னை உயர் நீதிமன்றத் தில் இரண்டாவது இடத்தில் உள்ள மூத்த நீதிபதியான வினீத் கோத்தா ரியை நியமித்து உத்தரவிட்டு உள்ளார்.
விரைவில் சென்னை உயர் நீீதி மன்றத்துக்கான தலைமை நீதிபதி யாக ஏ.கே.மிட்டலை நியமித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது. பதவியை ராஜினாமா செய்துள்ள தஹில் ரமானி தனது சென்னை மாளிகையை காலி செய்து விட்டதாக கூறப்படுகிறது.