Last Updated : 21 Sep, 2019 07:07 PM

 

Published : 21 Sep 2019 07:07 PM
Last Updated : 21 Sep 2019 07:07 PM

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவே வெற்றிபெறும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு துறை சார்பில் கடன்திட்டம் வழங்கும் முகாம், புதிய நிர்வாக உறுப்பினர்கள் பொறுபேற்கும் விழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்கும் விழாவுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பேசினார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசினார். அப்போது, "தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள கூட்டுறவு அச்சகம் கூட்டுறவு அமைப்புகளில் முறையாக தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாக உறுப்பினர்கள் பதவி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதிகமான கடன் வழங்குகின்ற மத்திய கூட்டுறவு வங்கிகளில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

அதன்படி ஏரலில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவு வங்கிக்கடனாக பொதுமக்களுக்கு ரூ.2 கோடியே 16 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம். விவசாயிகளுக்கு பயிர்கடனாக அதிகமான கடன்களை மத்திய கூட்டுறவு வங்கி வழங்கியுள்ளது.

மேலும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் வழிமுறைகள் அனைத்தும் எளிதாக்கி நடைமுறை சிக்கல்கள் எதுவும் இல்லாமல் விவசாயிகள் எளிதில் கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கூட்டுறவு வங்கி உறுதுணையாக இருக்கும்" என்றார்.

நிச்சயம் வெற்றி பெறுவோம்..

தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு நடைபெற்ற 22 சட்டமன்ற இடைத் தேர்தல்களில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த 5 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் தென் மாவட்ட தொகுதியான நாங்குநேரியிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்தாலும் கூட, விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகளை பெற்றிருந்தது.

வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக 48 சதவீத வாக்குகளும், திமுக 49 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தது. ஆகவே அந்த வகையில் இந்த இடைத் தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x