Published : 21 Sep 2019 03:42 PM
Last Updated : 21 Sep 2019 03:42 PM

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: செப்.23-ம் தேதி வேட்பாளர்களுக்கான நேர்காணல்; அதிமுக அறிவிப்பு

சென்னை

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல், வரும் 23-ம் தேதி நடைபெறும் என, அக்கட்சி தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த காங்கிரஸைச் சேர்ந்த ஹெச்.வசந்தகுமார், கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.யானார். இதையடுத்து, அவர் தன் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மே மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து நாங்குநேரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுகவின் ராதாமணி, கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காலியாக உள்ள இரு தொகுதிகளுக்கும் வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர், நாளை (செப்.22) மற்றும் அதற்கு மறுநாள் திங்கள்கிழமை விருப்ப மனு வழங்கலாம் என அதிமுக அறிவித்தது.

இந்நிலையில், வேட்பாளருக்கான நேர்காணல் வரும் 23-ம் தேதி நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம் இன்று (செப்.21) வெளியிட்ட அறிவிப்பில், "விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்துள்ள அதிமுகவினருக்கான நேர்காணல், தலைமைக் கழகத்தில் வரும் 23-ம் தேதி, திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது," என அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x