Published : 28 Jul 2015 10:23 AM
Last Updated : 28 Jul 2015 10:23 AM

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆக.1-ல் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பொறியியல் பொது கலந்தாய் வின் முடிவில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு, பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 1-ம் தேதி நடைபெறும். இதற்கு ஜூலை 31-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண் டும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250 மட்டும்.

விண்ணப்பிக்க வரும்போது, 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 ஹால்டிக்கெட், நிரந்தர சாதிச்சான்று, முதல் தலை முறை பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் இவற் றின் நகல்களையும் கொண்டுவர வேண்டும்.

கூடுதல் தகவல்களை >www.annauniv.edu/tnea2015 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x