பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரத்தில் அக்கறை காட்டுங்கள்: முடி திருத்துவோருக்கு வேண்டுகோள் விடுத்த ஆசிரியர்
மதுரை
பள்ளி மாணவர்களுக்கு முடிதிருத்தம் செய்வதில் அக்கறை காட்ட வேண்டும் என, மதுரை அலங் காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் சலூன் கடை உரிமையாளர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் விடுத்துள்ள வேண்டுகோள்:
அரசு பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள், திரைப்பட நடிகர் களை கற்பனை செய்து கொண்டு அதற்கேற்ப சிகை அலங்காரம் செய்கின்றனர்.
இது ஒழுக்கமின்மையை காட் டுகிறது. வகுப்பறையில் இதுகு றித்து கண்டித்தாலும் மாணவர்கள் கண்டுகொள்வதில்லை. மீண்டும் அதே போன்று முடி திருத்தம் செய்கின்றனர். பெரும்பாலும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் இவ்வாறு செய்கி ன்றனர். மேலும் முடிதிருத்தம் இன்றி தற்போது அழகு என்ற பெயரில் புருவத்தில் காது ஓரங்களில் கோடு போடுவது போன்று வெட்டிக் கொள்கின்றனர். இம்மாணவர்களை வகுப்பறையில் பார்க்கும்போது வேதனையாக உள்ளது. ஒரு கட்டத்துக்கு மேல் மாணவர்களை கண்டிக்க முடியாத நிலையில் உள்ளோம்.
நல்ல தலைமுறையை உருவாக் குவது நமது கடமை. ராணுவம், காவல்துறை போன்ற சீருடை பணியாளர்களுக்கு முடிதிருத்தம் செய்ய பயிற்சி நிலையம் உள்ளது. அது போல் மாணவர்களுக்கும் பள்ளி வளாகத்திலேயே முடி திருத்தம் செய்ய மையம் ஏற் பாடு செய்யலாம். சீருடை மாதிரி சிகை அலங்காரமும் மாணவர்களுக்கு முக்கியம்.
ஆகவே சலூன் கடைக்காரர்கள் தங்களது கடைகளுக்கு வரும் மாணவர்களுக்கு விநோதமாக முடி திருத்தம் செய்ய மறுக்க வேண்டும். இதுதொடர்பாக அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி அமல்படுத்தினால் இளைய சமுதாயத்தின் மன நிலை யை மாற்றலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
