Published : 21 Sep 2019 08:44 AM
Last Updated : 21 Sep 2019 08:44 AM

நிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர கூடாது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்

சென்னை 

மாநிலத்தின் நிதி தன்னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோலிய பொருட்கள், மின்சாரம் ஆகிய வற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது என்று கோவாவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் வலி யுறுத்தியுள்ளார்.

37- வது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் கோவாவில் நேற்று நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், வணிக வரித்துறை செயலர் கா.பாலச் சந்திரன், வணிகவரி ஆணையர் டி.வி.சோமநாதன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், 15 -வது நிதிக்குழு ஜிஎஸ்டி வரி விகிதங்களை சீரமைப்பது மற்றும் இழப்பீடு வழங்குவது குறித்த கருத்துக்களை சமர்ப்பித்தது.

கூட்டத்தில், அமைச்சர் ஜெயக் குமார் பேசியதாவது:

ஜிஎஸ்டி போதிய அளவுக்கு அதி கரித்து, சுமூகமான பொருளாதார நிலை நிலவும் போது வரி விகிதங் களை சீரமைப்பது குறித்து முடி வெடுக்கலாம். ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரி விலக்கு களை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற 15-வது நிதிக்குழுவின் கருத்து தமிழகத் துக்கு ஏற்புடையது கிடை யாது. ஏனெனில் இந்த வரிச்சலுகை கள் அனைத்தும் சிறு வணிகர் கள், விவசாயிகள், கைவினைத் துறையினருக்கு வழங்கப்பட் டுள்ளன. வரிவிலக்கை அகற்றி னால் அவர்கள் பாதிக்கப்படு வார்கள்.

தமிழகத்தின் கோரிக்கையால் தான் பெட்ரோலிய பொருட்களின் மீது ஜிஎஸ்டி விதிக்கப்படவில்லை. மேலும், மின்சாரத்தை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர 15 -வது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால், மாநிலத்தின் நிதி தன் னாட்சியை கருத்தில் கொண்டு பெட்ரோலிய பொருட்கள் (பெட் ரோல், டீசல்), மின்சாரம் ஆகிய வற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரக்கூடாது.

மாநிலங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஜிஎஸ்டி இழப்பீட் டுத் தொகை சரிசமமாக அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படு கிறது. இந்த தொகை 5 ஆண்டு களுக்கு மட்டுமே, அதாவது 2022-ம் ஆண்டு வரை மட்டுமே வழங்கப்பட உள்ளது. மாநிலங்களுக்கு வர வேண்டிய வருவாயை அதிகரிக் கும் பொருட்டு, 5 ஆண்டு காலம் முடிந்த பின்னரும் மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அல்லது அதற்கு மாற் றாக தற்போது விதிக்கப்பட்டு வரும் இழப்பீடு வழங்குவதற்கானமேல் வரியை ஜிஎஸ்டியுடன் இணைக்க வேண்டும்.

மேல்முறையீட்டு தீர்ப்பாயம்

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப் பாயங்களை மத்திய அரசு விரை வாக அமைக்க வேண்டும். ரூ.2 கோடி வரை விற்பனை அளவு கொண்ட வணிகர்கள் கணக்கு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என சட்டக்குழு பரிந் துரைத்துள்ளது. ரூ.5 கோடி வரை மொத்த தொகை உள்ள வரி செலுத்துவோர் தணிக்கை சான்றி தழ் பெறுவதை கட்டாயமாக்க வேண்டாம்.

தமிழகத்தில் உள்ள மீனவர் களின் நலன் கருதி மீன் துகள் களுக்கு (fish meal) இந்தாண்டு ஜனவரி முதல் முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும். வரி விகிதங்களை சீரமைத்தல், சாதாரண மக்களின் அத்தியா வசிய பயன்பாட்டுக்கான பொருட் கள், விவசாயிகள் மற்றும் மீனவர் கள் பயன்பெறுவதற்கான பொருட் கள், கைவினைஞர்களால் செய் யப்படும் பொருட்கள், சமய உணர்வு சார்ந்த பொருட்கள் என்ற அடிப்படையில் தமிழகம் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து பரிசீலித்து சாதகமான முடிவை எடுக்க வேண்டும்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாமாயில், மண்ணெண்ணெய் ஆகியவற் றுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக் குமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x