

சென்னை
வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வரும் 23-ம் தேதி முதல்வர் பழனி சாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடக்கிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை முடிவடைய இன்னும் 10 நாட்கள் உள்ளன. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது வடகடலோர மாவட்டங்களில் அதிக அளவில் மழைப் பொழிவு ஏற்பட்டதால், சென்னையும் புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் மிதந்தன. 2016-ம் ஆண்டு வீசிய வார்தா புயலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலத்திலேயே சென்னை உள்ளிட்ட வடமாவட்டங் களிலும் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவ மழை அக்டோபரில் தொடங்க உள்ளது. இதை எதிர்கொள் வதற்கான முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை அரசு எடுத்து வரு கிறது.
இந்நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதல் வர் பழனிசாமி தலைமையில் வரும் 23-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. மூத்த அமைச்சர்கள், பல்வேறு துறை களின் செயலர்கள், வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங் கேற்கின்றனர்.
முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளதால், இது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள தூர் வாருதல், வெள்ளத்தடுப்பு, கால் வாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான தகவல் களை அறிக்கையாகவும், ‘பவர் பாயின்ட்‘ வெளியீடாகவும் தயாரிக் கும் பணியில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலை மையிலான அதிகாரிகள் ஈடுபட் டுள்ளனர்.