தமிழகத்தில் பணியாற்றும் வடமாநிலத்தவரை கணக்கெடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் நிலோபர் கபீல் அறிவுறுத்தல்

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விருதுகள், உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் விருதுகளை வழங்கினார். உடன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் கா.மனோகரன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார். படம்: ம.பிரபு
தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் தொழிற்சாலைகள் பாதுகாப்பு விருதுகள், உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் விருதுகளை வழங்கினார். உடன், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் கா.மனோகரன், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை 

தமிழகத்தில் பணியாற்றும் வட மாநிலத்தவர்களை கணக்கெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச் சர் நிலோபர் கபீல் அறிவுறுத் தியுள்ளார்.

தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தேசிய பாதுகாப்பு குழுமம் இணைந்து தொழிற்சாலைகள் பாதுகாப்பு விருதுகள், உயர்ந்த உழைப்பாளர் விருதுகள் வழங்கும் விழா சென் னையில் நேற்று நடைபெற்றது. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் கா.மனோகரன் வரவேற்றார். அதை யடுத்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், 2014, 2015, 2016-ம் ஆண்டுகளுக்கான மாநில பாதுகாப்பு விருதுகளை 152 தொழிற்சாலை நிர்வாகத்தின ருக்கும், உயர்ந்த உழைப்பாளர் விருதுகளை 235 தொழிலாளர் களுக்கும் வழங்கினார். இந்நிகழ்ச் சியில் அவர் பேசியதாவது

தமிழகத்துக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் வர் பழனிசாமி 3 நாடு களுக்குச் சென்றார். அப்போது

அங்குள்ள நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இந்த முயற்சி வருங்காலத்திலும் தொட ரும். பாதுகாப்பாகச் செயல்படும் தொழிற்சாலைகளை ஊக்குவிக் கவும், தொழிலாளர்கள் பாதுகாப் பாகப் பணியாற்றிடவும் தேவை யானவற்றைச் செய்ய வேண்டி யது தலையாயக் கடமை என்பதை உணர்ந்து தமிழக அரசு செயல் பட்டு வருகிறது.

தமிழகத்தில் கட்டுமானத் தொழிலில் ஏராளமான வட மாநிலத்தவர்கள் பணிபுரிகின்றனர். அதனால், அவர்களில் 25 ஆயிரம் பேருக்கு தலா ரூ.2,175 மதிப்புள்ள காலணி, தலைக்கவசம், கையுறை, கண்ணாடி, பளிச்சிடும் உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங் களை வழங்க ரூ.5.44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்புக் கான இத்திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள் ளார். வடமாநிலத்தவர்கள் தமிழகத் துக்கு வந்து பல்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். தொழில் நடத்து பவர்கள், அவர்களைப் பற்றிய சரியான விவரங்களைத் தெரிவிப்ப தில்லை. இருப்பினும் அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். எனவே, தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தைச் சேர்ந்த குழந்தைகள், வளரி னம் பருவத்தினர் உள்ளிட்டோரின் விவரங்களை தொழிலாளர் நலத் துறை அலுவலர்கள் சேகரிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.

முன்னதாக, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார் பேசும்போது, “தமிழகத்தில் 44 ஆயிரம் தொழிற்சாலைகள் உள் ளன. தொழில் வளர்ச்சியில் தமிழகம் இந்தியாவிலேயே முன் னோடி மாநிலமாகத் திகழ்கிறது. தொழிற்சாலை பாதுகாப்பிலும், தொழிலாளர்கள் நலனிலும் தமிழக அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை" என்றார். தொழில கப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககத்தின் திருச்சி கூடுதல் இயக்குநர் வே.மனோகரன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in