

திருவள்ளூர்
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்த கனமழையால், சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்க ளில் கடந்த ஆண்டு போதிய மழை பெய்யா ததால், 2 மாவட்டங்களில் உள்ள சென் னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வறண்ட நிலையில் இருந்தன.
இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சி புரம் மாவட்டங்களில் பல்வேறு பகுதி களில் 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால், நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்து பூண்டி, சோழவரம், புழல், செம்பரம் பாக்கம் ஏரிகளுக்கு மழைநீர் வந்த வண்ணம் உள்ளது.
இதனால், கடந்த 18-ம் தேதி, 15 மில்லி யன் கன அடி நீர் இருப்பு இருந்த பூண்டி ஏரியின் நீர் இருப்பு, நேற்று காலை நிலவரப் படி 208 மில்லியன் கன அடியாக உயர்ந்துள் ளது. பூஜ்ஜியமாக இருந்த சோழவரம் ஏரி யின் நீர் இருப்பு 30 மில்லியன் கன அடியாக மாறியுள்ளது. பூஜ்ஜியமாக இருந்த புழல் ஏரியின் நீர் இருப்பு 27 மில்லியன் கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம் பாக்கம் ஏரியின் நீர் இருப்பு பூஜ்ஜியத்தில் இருந்து 8 மில்லியன் கன அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு அதிகரித்ததால், புழல் ஏரியில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு தண்ணீரை எடுக்க சென்னை குடிநீர் வாரியம் தயாராகி வருகிறது. புழல் ஏரியில் இதற்கான பணி தொடங்கியுள்ளது.