Published : 21 Sep 2019 08:28 AM
Last Updated : 21 Sep 2019 08:28 AM

சென்னை புறநகர் பகுதியில் ரூ.69 கோடியில் வெள்ளநீர் தடுப்பு, ஏரிகள் தூர்வாரும் பணி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் முடிவுற்ற வெள்ளத் தடுப்பு பணிகளை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் தருமபுரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் கோவையில் (வடக்கு) கட்டப்பட்டுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தையும் திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார், பெஞ்சமின் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம்.

சென்னை

சென்னை புறநகர் பகுதிகளில் ரூ.68 கோடியே 60 லட்சத்தில் ஏரிகளை தூர்வாருதல், வெள்ள நீர் முறைப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய பணிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழைக் காலங் களில் அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு, கூவம் மற்றும் கோவளம் ஆற்றுப்படுகைகளில் உள்ள சென்னை பெருநகர மாநக ராட்சி மற்றும் அதைச் சுற்றி யுள்ள புறநகர், ஊரக பகுதி குடி யிருப்புகள் வெள்ள நீரில் மூழ்கும் நிலை ஏற்படுகிறது. அப்பகுதிகளில் வெள்ளத்தணிப்பு பணிகளை மேற் கொள்ள ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் 29-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதன்படி, முதல்கட்டமாக காஞ்சி மாவட்டத்தில் சென்னை புறநகர் சாலை - முடிச்சூர் சாலை சந்திப்பு முதல் பாப்பன் கால்வாய் வரை, பள்ளிக்கரணை, நாராயண புரம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை தலா ரூ.20 கோடி வீதம், ரூ.40 கோடியில் நீர்வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

பெரும்புதூர் வட்டத்தில் ஆதனூர் ஏரி உபரிநீர் கால்வாய் பகுதியில் ரூ.8 கோடியே 50 லட்சம் மதிப்பிலும், பாப்பன் கால்வாய் பகுதியில் ரூ.7 கோடி மதிப்பிலும் சாலைகளுக்கு அடியில் பெரிய நீர்வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. அடையாறு ஆற்றுப்படு கையில், நந்திவரம், நன்மங்கலம், புது தாம்பரம், இரும்புலியூர் ஏரி கள் மற்றும் கோவளம் ஆற்றுப் படுகையில் நாராயணபுரம், பெரும் பாக்கம், திருவஞ்சேரி, ஒட்டியம் பாக்கம் ஏரிகளில் ரூ.3 கோடியே 20 லட்சம் மதிப்பில், வெள்ளத்தடுப்பு பணிகளுடன் உபரி நீர் வெளியேற் றும் அமைப்புகள் ஏற்படுத்தப் படுகிறது.

மேலும், மணிமங்கலம் ஏரியின் கரைகள் ரூ.2 கோடியில் தூர்வாரப் பட்டு கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. அதேபோல், அடையாறு ஆற்றுப்படுகையில் ஆதனூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் ஏரி கள் மற்றும் கோவளம் ஆற்றுப்படு கையில் நன்மங்கலம் ஏரி ஆகிய ஏரிகள் ரூ.4 கோடியில் தூர்வாரி ஆழப்படுத்தப்பட உள்ளது.

அடையாறு ஆற்றின் உபநதி யான ஒரத்தூர் ஓடையின் குறுக்கில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க, முதல்கட்டமாக ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் ஆரம்பாக்கம், ஒரத்தூர் ஏரிகளை இணைக்கும் கரைகள் அமைக்கப்பட உள்ளன. ஊரப்பாக்கம் மற்றும் நந்திவரம் ஏரிகளுக்கு இடையில் சாலையின் கீழ் ரூ.2 கோடியில் வெள்ளநீர் வடிகால், திருவள்ளூர் மாவட் டம் திருநின்றவூர் ஏரியில் ரூ.40 லட்சத்தில் உபரிநீர் வெளியேற் றத்தை முறைப்படுத்தும் பணி கள் மேற்கொள்ளப்படுகிறது.

மொத்தம் ரூ.68 கோடியே 60 லட்சம் மதிப்பிலான வெள்ளத் தடுப்பு பணிகளை முதல்வர் பழனி சாமி நேற்று தொடங்கி வைத்தார்.

இப்பணிகளால், தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வரத ராஜபுரம், சேலையூர், பள்ளிக் கரணை போன்ற புறநகர் பகுதி களில் வசிக்கும் 6 லட்சம் மக்கள் பருவ மழைக்காலங் களில் வெள்ள பாதிப்பில் இருந்து காக்கப்படுவதுடன், 172 மில்லியன் கனஅடி நீர் சேகரிக்க வழி ஏற்படும்.

வேளாண்துறை

தமிழ்நாடு வேளாண் பல் கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை வேளாண் கல்லூரி யில் ரூ.19 கோடியே 37 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விரிவுரை அரங்கம், தேர்வு அறை ஆகியவற் றையும், ரூ.114 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேளாண் கட்டிடங்கள், 5 சேமிப்பு கிடங்குகள் மற்றும் ரப்பர் தாள் உலர்ப்பான் அறை ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி, இரா. துரைக்கண்ணு, ஆர்.பி.உதய குமார், பி.பெஞ்சமின், தலைமைச் செயலர் கே.சண்முகம், வருவாய்த் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x