Published : 21 Sep 2019 08:19 AM
Last Updated : 21 Sep 2019 08:19 AM

இன்று உலக கடலோர தினம்: கடல், கடல்வாழ் உயிரிகளுக்கு பிளாஸ்டிக்கால் ஆபத்து

சுற்றுலா மையமான கன்னியாகுமரி கடற்கரையில் தேங்கியுள்ள நெகிழி கழிவுகள்.

எல்.மோகன்

நாகர்கோவில்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3-வது சனிக்கிழமை, உலக கடலோர தினமாக கடைபிடிக்கப்படுகிறது. கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருப்பது, கடற்கரையை அழிவின் பாதையில் இருந்து மீட்டெடுப்பது ஆகியவை இதன் நோக்கம்.

இந்தியாவில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, தெலங் கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங் களில் சுமார் 8,400 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை உள்ளது. தமிழகத்தில் 13 கடலோர மாவட் டங்களில் 1,024 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை உள்ளது. கடற்கரைதான் மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம்.

நெகிழிகளை (பிளாஸ்டிக்) பயன்படுத்துவதாலும், ரசாயன கழிவுகள் கடலில் கலப்பதாலும் கடல் நீர் மாசடைந்து வருகிறது. தமிழக கடற்கரையில் பல ஆயிரம் டன் நெகிழியும், கழிவுகளும் தேங் கியுள்ளன. குப்பைக் கிடங்காக மாறி வரும் கடற்கரையால் மீன் மற்றும் கடல் உயிரினங்களுக்கும், மீன்பிடி தொழிலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு, மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். கடலில் இயற்கை மாற்றம்ஏற்பட்டு, பேரி டர் நிகழ்வதற்கும் நெகிழியும், கழிவுகளுமே காரணம்.

கன்னியாகுமரி தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர், பாதிரியார் சர்ச்சில் கூறியதாவது:

கடற்கரை பகுதிகள் குப்பைக் கிடங்காக மாறிவருவது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கரையில் இருந்து கடலுக்குச் செல் லும் கப்பல்கள், விசைப்படகுகள் கழிவுகளை வெளியேற்றும்போது, அவை கடலில் மாசு ஏற்படாத வாறு விழிப்புணர்வுடன் செயல் பட வேண்டிய தருணம் இது.

தொழிற்சாலைகள், அணுஉலை கள் போன்றவற்றில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கட லோரங்களில் தேங்கி, சில நாட்களில் ஆழ்கடலில் கலக்கின் றன. இவை மீன்கள் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பேரா பத்தை ஏற்படுத்துகின்றன.

காற்றிலுள்ள ஆக்சிஜனை நெகி ழிகள் மாசுபடுத்துவதால் மீன்கள், கடல் உயிரிகள் சுவாசிக்க முடியா மல் அழிந்து வருகின்றன.

இயற்கை சீற்றம்

கடலில் கலக்கும் குப்பைகளில் 60 சதவீதம் நெகிழியால் ஆனவை. ஒரு மைல் சுற்றளவு கடல் பகுதி யில் சுமார் 46 ஆயிரம் நெகிழி துண்டுகள் உள்ளதாக கடல்சார் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இவற்றால் ஆண்டுக்கு 1 மில்லியன் பறவைகள், 1 லட் சத்துக்கும் அதிகமான ஆமைகள், மீன்கள் அழிந்து வருகின்றன.

தமிழகத்தில் சுனாமி, ஒக்கி புயல் போன்ற இயற்கை சீற்றம் கடலில் நிகழ்ந்து, பேரழிவு ஏற்பட்டதற்கு கடல் மாசுபடுவதும் முக்கிய காரணம்.

மாயமாகும் தீவுகள்

கடலுக்குள் பல தீவுகள் காணாமல் போய்விட்டன. நெகிழி களை சேகரித்து மறுசுழற்சிக்கு உட்படுத்த வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் கடலோரத்தை பாதிக்கும் கட்டுமானங்களை தடை செய்ய வேண்டும். கடலில் கழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும்.

இதை மத்திய, மாநில அரசுகள் கண்டிப்புடன் கையாள வேண்டும் என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x