Published : 21 Sep 2019 07:53 AM
Last Updated : 21 Sep 2019 07:53 AM

சிவகாசியில் தீபாவளி பட்டாசு உற்பத்தி தீவிரம்

இ.மணிகண்டன்

சிவகாசி

விருதுநகர் மாவட்டம், சிவகாசி யில் இந்த ஆண்டு தீபாவளிக் காக பட்டாசு உற்பத்தி விறுவிறுப் படைந்துள்ளது.

சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வரு கின்றன. நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 90 சதவீத பட்டாசு இங்கு உற்பத்தி ஆகிறது. தீபாவளி நெருங்குவதையொட்டி சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்படைந்துள்ளது.

ஆனாலும், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கக்கோரி, உச்ச நீதிமன்றத் தில் வழக்கு நடப்பதாலும், பசுமை பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதாலும், இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி குறைவுதான் என உற்பத்தியாளர்கள் தெரிவிக் கிறார்கள்.

இதுகுறித்து உரிமம் பெற்ற சிறு பட்டாசு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வி.அருண் கூறிய தாவது: கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு சிவகாசியில் பட்டாசு உற்பத்தி குறைவாகவே உள்ளது. உச்ச நீதிமன்ற வழக்கு, பசுமை பட்டாசுதான் தயாரிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசு உற்பத்தி பெருமளவில் சரிந் துள்ளது.

வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்க நீதிமன்றம் தடை விதித்த தால் அங்கு உள்ள விற்பனை யாளர்களிடம் இருந்து ஆர்டர்கள் கிடைக்காத நிலையே, கடந்த மாதம் வரை நீடித்தது. இதனால் பட்டாசு உற்பத்தியை தொடர்வதிலும் சுணக்கம் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை யொட்டி தற்போது வட மாநிலங் களில் இருந்து ஆர்டர்கள் வரத் தொடங்கியுள்ளதால் பட்டாசு உற் பத்தியும் விறுவிறுப்பு அடைந் துள்ளது.

பட்டாசு உற்பத்தி மற்றும் விற் பனைக்கு தடை கோரி தொடரப் பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தீர்ப்பின்படி பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இறுதித் தீர்ப்பு எவ்வாறு இருக் கும் என்ற அச்சமும் உற்பத்தியாளர் களிடமும், தொழிலாளர்களிடமும் நிலவி வருகிறது. பட்டாசுத் தொழிலை காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x