இளவரசன் நினைவு தினம்: தருமபுரியில் 144 தடை உத்தரவு

இளவரசன் நினைவு தினம்: தருமபுரியில் 144 தடை உத்தரவு
Updated on
1 min read

தருமபுரி இளவரசன் 2-ம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 4ம் தேதி வர இருப்பதை ஒட்டி தருமபுரி ஆர்.டி.ஓ எல்லைக்கு உட்பட்ட தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம் ஆகிய 3 வட்டங்களில் 01.07.2015 முதல் ஒருவாரம் 144 தடையுத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ மேனுவல்ராஜ் அறிவித்துள்ளார்.

தருமபுரியை அடுத்துள்ள நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். காதல் கலப்பு திருமண விவகாரத்துக்குப் பிறகு, கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்தார்.

இளவரசனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 4-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. நினைவு நாள் நிகழ்ச்சியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்டம் முழுவதும் இன்று (01.07.2015) முதல் ஒருவாரம் வரை 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in