Published : 20 Sep 2019 09:59 am

Updated : 20 Sep 2019 09:59 am

 

Published : 20 Sep 2019 09:59 AM
Last Updated : 20 Sep 2019 09:59 AM

மோடி - சீன அதிபர் அக். 11-ல் கோவளம் வருகை: மாமல்லபுரத்தில் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்பு

modi-chennai-visit

மாமல்லபுரம்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் அக்.11-ம் தேதி கோவளம் பகுதிக்கு வருகை தர உள்ளதாக, தகவல்கள் வெளி யாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி அழைப்பின் பேரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்தியா வர உள்ளார். இரு தலைவர்களின் சந்திப்பு, காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள தாக அதிகாரிகள் தெரிவிக்கின் றனர். மேலும், பாரதப் பிரதமரும், சீன அதிபரும் கோவளம் பகுதியில் உள்ள பிஷர்மேன் கோவ் ரிசார்ட் என்ற நட்சத்திர சொகுசு விடுதியில் தங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், கோவளம் பகுதியில் உளள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலி புரம் சாலை ஆகியவற்றில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு, 24 மணி நேரமும் போலீஸார் கண்காணிப் புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

மாமல்லபுரத்தில் இரு தலைவர்களின் வருகையின்போது அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும், சாலைகளில் இடையூறு ஏற்படுவதை தடுப் பதற்காகவும், சாலையோர ஆக்கிரமிப்புகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இரு தலைவர்களும் வரும் அக்.11-ல், கோவளம் வர உள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அவர்கள் 12-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கலைச் சின்னங்களை பார்வையிட உள்ளதாக வருவாய் மற்றும் காவல் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. அதனால், கடற் கரை மற்றும் கல்பாக்கம் முதல் கோவளம் வரையிலான பகுதிக ளில் போலீஸார் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி உள்ள னர்.

இருவரும் கோவளத்தில் உள்ள சொகுசு விடுதியில் தங்க உள்ளதாக கூறப்பட்டாலும், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதி மற்றும் பூஞ்சேரி பகுதியில் உள்ள சொகுசு விடுதி களும் தயார் செய்யப்பட்டு வருகின் றன.

இவற்றில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக வும், இருநாட்டின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளும் பங் கேற்று நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க உள்ளதாகவும் உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின் றன.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

கோவளம்மாமல்லபுரம்பிரதமர் மோடிசீன அதிபர்ஜி ஜின்பிங்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author