

சென்னை
தொடர் மழை காரணமாக மண்ணடியில் வீட்டின் சுவர் இடிந்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. சென்னையில் அதிகபட்சமாக 9 செமீ மழை பதிவானது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை முழுவதும் பெய்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சென்னை மண்ணடி ஐயப்ப செட்டி தெருவில் ஓட்டு வீட்டில் வசித்து வருபவர் நவாஸ்கான் (55). இவரது மனைவி ஜெரினா பேகம்(50). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இரவு முழுவதும் கனமழை பெய்த நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அள வில், அனைவரும் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். அப் போது வீட்டின் ஒருபக்கச் சுவர் திடீ ரென இடிந்து விழுந்தது. இதில் சிக்கி ஜெரினா பேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர், மகன், மகள் காயமின்றி தப்பித்தனர்.
பழமையான வீடு
விபத்து குறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத் துக்கு வந்து ஜெரினா பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக் காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மண்ணடி போலீஸார் நடத்திய விசாரணை யில், அவர் வசித்து வந்த வீடு மிகவும் பழமையானது என்பதும், மழையால் சுவருக்குள் தண்ணீர் இறங்கி பலமிழந்து இடிந்ததும் தெரியவந்தது.