Published : 20 Sep 2019 09:35 AM
Last Updated : 20 Sep 2019 09:35 AM

மலிவு விலை இயற்கை உரம் வீடுகளுக்கு நேரடி விநியோகம்: சென்னை மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு 

சென்னை

சென்னை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை உரம், மலிவு விலையில் வீடுகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:

சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சுமார் 4 ஆயிரத்து 930 டன் குப்பை சேகரமாகிறது. பின்னர் இக்குப்பை, மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கிறார்கள். மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தகுந்த மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது.

மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1711 உறை கிணறு மையங்கள், 21 புதைகுழி மையங்கள் மற்றும் 2 நுண்ணுயிர் உர மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் மக்கும் குப்பைகளிலிருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தினமும் சேகரிக்கப்படும் மொத்த குப்பையி லிருந்து சுமார் 400 டன் அளவி லான மக்கும் குப்பைகள் பிரித் தெடுக்கப்பட்டு, அவற்றிலிருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உரம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது.

இதுநாள் வரை சுமார் 160 டன் இயற்கை உரம் பொதுமக்களுக்கு மலிவு விலையிலும், மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டுள் ளன. தற்போது மாநகராட்சியிடம் சுமார் 190 டன் இயற்கை உரம் கையிருப்பில் உள்ளது.

இந்த உரங்கள் நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் மற்றும் சென்னை டெஸ்டிங்க் லேபோரேட் டரி லிமிடெட் என்ற நிறுவனத்தால் பயன்படுத்துவதற்கு உகந் தவை என தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் நலன் கருதி இவ்வகையிலான இயற்கை உரம் கிலோ ரூ.20-க்கு விற்கப்படுகிறது. இதை பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.

வாட்ஸ்அப் செயலி

அதன்படி 9445194802 என்ற செல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு அல்லது வாட்ஸ்அப் செயலியில் தொடர்புகொண்டு தங் களுக்கு தேவையான உரத்தின் அளவை குறிப்பிட்டு முழு முகவரியை அளித்தால், நேரடி யாக வீடுகளுக்கே மாநகராட்சி மூலம் மலிவு விலை உரம் விநி யோகிக்கப்படும். அப்போது உரத்துக்கான பணம் பெற்றுக் கொள்ளப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x