Published : 20 Sep 2019 09:14 AM
Last Updated : 20 Sep 2019 09:14 AM

ஆபத்து காலங்களில் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்பதில் காலதாமதம்: விரைந்து நடவடிக்கை எடுக்க ஒருங்கிணைந்த புதிய பிரிவு தொடங்க யோசனை

மு.யுவராஜ்

சென்னை 

ஆபத்து காலங்களில் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்ப தில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்குத் தீர்வு காண கடலோர மாவட்டங்களில் அனைத்து துறைகளையும் ஒருங் கிணைத்து புதிய பிரிவை தொடங்க வேண்டும் என்று மீனவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 11 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பைபர் படகு, விசைப்படகு, நாட்டுப்படகு மூலம் மீன் பிடிக்கிறார்கள். இவ் வாறு, மீன்பிடிக்கச் செல்லும் போது, படகு கடலில் மூழ்குவது, தீ பிடிப்பது உள்ளிட்ட பல்வேறு ஆபத்து காலங்களில் மீனவர்கள் சிக்கித் தவிக்கும் சூழல் ஏற்படு கிறது.

இதுபோன்ற நேரங்களில் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை விரைந்து மீட்க அனைத்து துறை அதிகாரிகள், மீனவர்களை ஒருங் கிணைத்து தனிப்பிரிவை உரு வாக்க வேண்டும் என்று மீனவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர் எம்.கருணாமூர்த்தி கூறியதாவது:

ஆபத்து காலங்களில் மீனவர் கள் கடலில் தத்தளிக்கும்போது, மீன்வளத் துறை உதவி இயக்கு நருக்கு தகவல் தெரிவிப்போம். அவர் மூலம் கடலோர காவல் படை மற்றும் கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

தகவல் கிடைத்து கடலில் தத்தளிப்பவரை மீட்கும் பணியை அதிகாரிகள் தொடங்க குறைந்தது 2 அல்லது 3 மணி நேரமாகி விடும். அதற்குள், தத்தளிக்கும் மீனவர்கள் உயிரிழக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றனர்.

தகவல் பரிமாற்றம்

அனைத்து துறைகளிலும் தக வல் பரிமாற்றம்தான் பெரிய சிக்கலாக உள்ளது. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இருக் கும் இடங்களை கண்டறியும் கருவி களும் சொற்ப எண்ணிக்கையில் தான் மீன்வளத் துறையினரால் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க மீன்வளத் துறை, கடலோர காவல்படை, கடற்படை அதிகாரிகள், மீனவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து புதிய பிரிவை உருவாக்க வேண்டும்.

பல உயிர்கள் காக்கப்படும்

தமிழகத்தில் உள்ள 13 கட லோர மாவட்டங்களிலும் அந்தந்த பகுதி அதிகாரிகள், மீனவர்களை ஒருங்கிணைத்து புதிய பிரிவு செயல் பட்டால் கடலில் தத்தளிக்கும் மீனவர்கள் குறித்த தகவல் கிடைத்தவுடன் தேடுதல் பணியை விரைந்து தொடங்க முடியும். கால விரயமும் ஏற்படாது. இதன் மூலம், பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மீனவர்கள் கடலில் விபத்தில் சிக்கிய தகவல் கிடைத்தவுடன் கடற்படை, கடலோர காவல்படை, மீன்வளத் துறை உள்ளிட்ட அதி காரிகள் ஒருங்கிணைந்து விரைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சேட்டிலைட் போன், விஎச்எப்

இருப்பினும், பரந்து விரிந்தி ருக்கும் கடலில் தத்தளிக்கும் மீன வர்கள் இருக்கும் இடத்தை துல்லிய மாக கண்டறிவதில் சிரமம் ஏற்படு வதால் தாமதம் ஏற்படுகிறது. இந்த சிக்கலைத் தீர்க்க சேட்டிலைட் போன், விஎச்எப் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள ஜிபிஎஸ் தொழில்நுட்பத் தைப் பயன்படுத்தி கடலில் மீன வர்கள் இருக்கும் இடத்தை கண்ட றிய முடியும்.

ஆனால், இவை அனைத்தையும் மீனவர்கள் கடலுக்கு எடுத்துச் செல் வதில்லை. வீட்டிலேயே வைத்து விடுவதால் ஆபத்து காலங்களில் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. ஒவ்வொரு கடலோர மாவட்டத்துக்கும் ஒருங்கிணைந்த பிரிவு என்று புதிய பிரிவை உருவாக்குவதில் தவறில்லை. இருப்பினும், தொலைத்தொடர்பு சாதனங்களை மீனவர்கள் கையில் கொண்டு சென்றால்தான் இந்த காலதாமதத்துக்கு தீர்வு ஏற்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x