

தமிழ்நாடு வக்பு வாரியத்தை நிர்வாகிக்க ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் சொத்துகள், இஸ்லாமிய சொத்துகளை பராமரிக்கும் வக்ஃப் வாரியத்துக்கு தேர்வு உறுப்பினர்கள், நியமன உறுப்பினர்கள், கவுரவ உறுப்பினர்கள் உண்டு.
வக்ஃப் வாரிய தலைவராக அதிமுக முன்னாள் எம்பி அன்வர்ராஜா மற்றும் உறுப்பினர்களாக அபூபக்கர் எம்.எல்.ஏ,, தமிழ்மகன் உசேன், பாத்திமா முசாபர் உள்ளிட்ட பலர் உள்ளனர். வக்பு வாரியத்தை நிர்வகித்து வரும் உறுப்பினர்கள் பதவிக்காலம் அண்மையில் நிறைவடைந்தது.
புதிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். நியமன உறுப்பினர்கள் அதிகமாகவும் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இல்லாத நிலையில் வக்பு வாரிய செயல்பாட்டின் நிலையை பரிசீலித்து வக்பு வாரியத்தை இடைக்காலத்தில் நிர்வாகிக்க ஐஏஎஸ் அதிகாரி சித்திக்கை ஆளுநர் நியமிக்க உத்தரவிட்ட அடிப்படையில் வாரியத்தை நிர்வாகிக்க ஐஏஎஸ் அதிகாரி சித்திக்கை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தற்போது நிதித்துறையில் (செலவீனம்) முதன்மைச் செயலராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.