

சென்னையில் உள்ள 4 மண்டலங்களில் வசிக்கும் பொதுமக்களின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும் போக்குவரத்து காவல் வடக்கு - தெற்கு மண்டல பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் சென்னையில் நடக்க உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சென்னை பெருநகரில் வசிக்கும் பொதுமக்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் தொடர்பாக தங்களுக்கு (பொதுமக்கள்) உள்ள குறைகளுக்கு தீர்வு காண ஏதுவாக அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த சென்னை காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் உத்தரவிட்டார்.
அதன்படி, சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் ஆர்.தினகரன், (வடக்கு) மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா, (தெற்கு) ஆகியோர் மேற்பார்வையில், சென்னையில் உள்ள 4 மண்டல இணை ஆணையாளர்கள் தலைமையில், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர் அடங்கிய காவல் குழுவினர் மூலம், வருகிற 21-ம் தேதி அன்று சென்னையில் 4 இடங்களில் “பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்” நடைபெற உள்ளது.
இம்முகாமில் ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் கொடுத்து தீர்வு கிடைக்கப் பெறாத பொதுமக்கள் மட்டும் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சட்டம் ஒழுங்கு பொதுமக்கள் குறைகேட்பு முகாம் நடைபெறும் நாள், முகாம் நடைபெறும் இடம், தலைமை விபரம்:
1. வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம், வடக்கு மண்டலம் 21.09.2019 காலை 11.00 மணி சமுதாய கூடம்,
புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையம், கபில்குமார் சி.சராட்கர், வடக்கு மண்டல இணை ஆணையர்
2.அம்பத்தூர் காவல் மாவட்டம், மேற்கு மண்டலம், 21.09.2019 காலை 10.30 மணி, மங்களம் திருமண மண்டபம், சி.டி.எச்.சாலை, திருமுல்லைவாயல். மேற்கு மண்டல இணை ஆணையாளர் பி.விஜயகுமாரி.
3. புனித தோமையர்மலை மாவட்டம், தெற்கு மண்டலம் ,21.09.2019 காலை 11.00 மணி. இடம்: ஆயுதப்படை மைதானம், புனித தோமையர்மலை. தெற்கு மண்டல இணை ஆணையாளர், சி.மகேஸ்வரி,
4. திருவல்லிக்கேணி காவல் மாவட்டம், கிழக்கு மண்டலம் 21.09.2019 காலை 11.00 மணி , இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மாண்டியத் ரோடு, எழும்பூர். கிழக்கு மண்டல இணை ஆணையாளர் சுதாகர்.
மேற்குறிப்பிட்ட காவல் எல்லை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேப்போன்று போக்குவரத்து காவல் சார்பில், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர் (போக்குவரத்து) ஏ.அருண், வழிகாட்டுதலின்படி, காவல் உயர் அதிகாரிகள், பொதுமக்களை நேரில் சந்திக்கும் “போக்குவரத்து சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம்” வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் போக்குவரத்து காவல் இணை ஆணையாளர்கள் கீழ்கண்ட தேதி மற்றும் இடங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து துரித நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
போக்குவரத்து மாவட்டம், முகாம் நடைபெறும் நாள் முகாம் நடைபெறும், இடம் தலைமை
1. போக்குவரத்து வடக்கு மாவட்டம், (பூக்கடை, வண்ணாரப்பேட்டை மற்றும் மாதவரம் மாவட்டம்) 21.09.2019 காலை
11.00 மணி மாவட்டம். வடக்கு கடற்கரை காவல் நிலைய வாளகம், முதல்தளம், இராஜாஜி சாலை.சென்னை-01
போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (வடக்கு) மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளர் (வடக்கு), போக்குவரத்து தெற்கு மாவட்டம்
தியாகராயநகர், அடையார் மற்றும் புனிததோமையார் மலை மாவட்டம், 21.09.2019 காலை, 11.00 மணி ஶ்ரீஹால், பர்கிட் ரோடு,
தியாகராயநகர் போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் (தெற்கு) அனைத்து பொதுமக்களும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குறைகளுக்கு தீர்வு காணுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.