Published : 19 Sep 2019 02:25 PM
Last Updated : 19 Sep 2019 02:25 PM

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒரே இரவில் கொட்டித் தீர்த்த மழை: செப்டம்பரில் அதிகபட்ச மழை பதிவான விவரம்

சென்னை

சென்னையில் நேற்றிரவு பெய்த மழையால் சென்னை முழுவதும் சாலைகளில் மழை நீர் சூழ்ந்து வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் ஒரு இரவில் அதிகபட்சமான மழை அளவு பதிவாகியுள்ளது.

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. திருவள்ளூரில் அதிகபட்சமாக 21.6 செ.மீ. மழை பதிவானது. சென்னையில் அதிகபட்சமாக அயனாவரத்தில் 9 செ.மீ.மழையும், நுங்கம்பாக்கத்தில் 7 செ.மீ. மழையும் பரவலாக 5 செ.மீ. மழையும் சென்னை முழுவதும் பதிவானது.

சென்னையில் இரவு முழுவதும் விடாது பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்தது. விடாது பெய்த மழையால் அதிகாலையில் மண்ணடி ஐயப்பன் தெருவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஜெரீனா பேகம் என்கிற பெண் உயிரிழந்தார். விடாது பெய்த மழையால் ஆவடியின் ஏரி நிரம்பி உடைப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குப் பின் சென்னை நகரில் கனமழை பெய்துள்ளது. வழக்கமாக ஜனவரி முதல் ஆகஸ்டு வரையிலான சராசரி மழை அளவை விட மழை அதிகமாக பெய்தது. அதேபோன்று செப்டம்பர் மாத சராசரிக்கு நிகரான மழை ஒரே நாளில் பெய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் நேற்றிரவு மட்டும் பெய்த மழையின் அளவு வருமாறு:
தமிழகத்தில் கேடிசி எனப்படும் பகுதியில் (19/09/2019) கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு:-

அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் மூவூரில் 23.8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக வட மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பதிவாகியுள்ளது. மூவூர்-(திருவள்ளூர்) 23.8 செ.மீ, திருவள்ளூர் (திருவள்ளூர்) 21.6 செ.மீ, பூண்டி (திருவள்ளூர்) 20.6 செ.மீ, அரக்கோணம் (வேலூர்) 16.6 செ.மீ, தாமரைப் பாக்கம் (திருவள்ளூர்) 15.4 செ.மீ, திருத்தணி (திருவள்ளூர்) 15 செ.மீ, திருநின்றவூர் (திருவள்ளூர்) 14.7செ.மீ, சோழவரம் (திருவள்ளூர்) 13.5செ.மீ, திருவாலங்காடு (திருவள்ளூர்) 12.8செ.மீ, திருத்தணி PTO (திருவள்ளூர்) 11.7செ.மீ, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 10.7 செ.மீ. வரை மழை பதிவானது.

பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) 10.5 செ.மீ, நுங்கம்பாக்கம் ( சென்னை) 10.4 செ.மீ , எண்ணூர் துறைமுகம் (சென்னை) 9.9 செ.மீ, மீனம்பாக்கம் (சென்னை) 9.5 செ.மீ, சென்னை நகரம் (சென்னை) 9.7செ.மீ, அயனாவரம் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்) 9.6 செ.மீ , சென்னை ஜிபிஆர்எஸ் (சென்னை) 9.1 செ.மீ, சென்னை விமான நிலையம் (சென்னை) 8.9 செ.மீ, பெரம்பூர் மாநகராட்சி பூங்கா (சென்னை) 8.8 செ.மீ, அம்பத்தூர் (சென்னை) 8.5 செ.மீ, மீனம்பாக்கம் ISRO (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்) 7.9 செ.மீ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 7.86 செ.மீ. வரை மழை பதிவானது.

அரசு உயர்நிலைப்பள்ளி எம் ஜி ஆர் நகர்-மாம்பலம் (சென்னை) 7.68 செ.மீ, கொரட்டூர் (திருவள்ளூர்) 7.5 செ.மீ, நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் (சென்னை) 7.4 செ.மீ , மாதவரம் AGR (சென்னை) 7.3 செ.மீ, டிஜிபி அலுவலகம் (சென்னை) 7.6 செ.மீ , பிரமனாபுரம் (வேலூர்) 6.98 செ.மீ, தண்டையார்பேட்டை (சென்னை) 6.55 செ.மீ, ஆலந்தூர் (சென்னை) 6.2 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 5.9 செ.மீ, காட்பாடி (வேலூர்) 5.5 செ.மீ, பொன்னேரி (திருவள்ளூர்) 5.0 செ.மீ, கேளம்பாக்கம் (சென்னை) 4.9 செ.மீ. என ஒரே இரவில் சராசரியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 15 செ.மீ. வரையிலும் சென்னையில் 6 செ.மீ. வரையிலும் மழை பதிவாகியுள்ளது.

இந்த மழை மேலும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர் , வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x