

என். சன்னாசி
மதுரை
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 2,400-க்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரி யர்களை நியமிக்க அண்மையில் அறி விப்பு வெளியானது. இப்பணிக்கு பி.எச்டி., பெற்றிருந்தால் ஸ்லெட், நெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சுசீலா என்பவர் 2015-ல் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் ஸ்லெட், நெட் தேர்ச்சி அவசியம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2017-ல் முத்துலட்சுமி என்பவர் தொடுத்த வழக்கிலும் ஸ்லெட், நெட் தேர்ச்சி கட்டாயம் என உயர் நீதிமன்ற கிளையும் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் உதவிப் பேரா சிரியர் பணிக்கு பி.எச்டி. பெற்றவர்களே தற் போது அதிகமாக நியமிக்கப்படுவ தாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நலச் சங்க நிர்வாகி கூறிய தாவது: ஸ்லெட், நெட் தேர்ச்சி இன்றி பி.எச்டி.யை மட்டும் தகுதியாகக் கொண்டு வாய்ப்பளிப்பது கல்விக் கொள்கைக்கு முரணானது. முதுகலை, எம். பில்., முடித்து ஸ்லெட் அல்லது நெட் தேர்ச்சி பெறும் கிராமப்புற மாணவர்கள், பொருளாதார சூழலால் பலர் பி.எச்டி. முடிப்பது சிரமம். மேலும் பி.எச்டி. தரம் குறித்து கேள்வி எழும் நிலையில், மாணவர்களிடையே ஆரா ய்ச்சித் திறனை மேம்படுத்த பி.எ ச்டி.க்கு விலக்கு அளிக்கிறோம் எனப் பல் கலை். மானியக் குழு கூறி னாலும் ஏற்க இயலாது.
2007-க்குப் பிறகு ஸ்லெட், நெட் தேர்ச்சி இருந்தாலும், பி.எச்டி.யைக் கணக்கில் எடுத்து உதவிப் பேராசிரியர் காலி யிடம் நிரப்பப்படுகிறது. போதிய தகுதி, கற்பித்தல் திறன் இருந்தும், பிற துறையில் சாதாரண பணியில் உள்ள சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிகக் கல்லூரிப் பணி அனுபவம் இன்றி வாய்ப்பை இழக்கிறோம். குறுக்கு வழி தெரிந்தவர்களே அதிக ஊதியம் கிடைக்கும் இப் பணியைப் பெறுகின்றனர். 2007 முன்பு ஸ்லெட், நெட் தேர்வில் தேர்ச்சி, டிஆர்பி எழுத்துத் தேர்வு ஆகியவை மூலம் அரசு கல்லூரிகளில் உதவிப் பேரா சிரியர்கள் நியமிக்கப்பட்டனர். மீண்டும் அதைக் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள் ளோம் என்று கூறினார்.
ஓய்வுபெற்ற கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் ஒருவர் கூறியது: அரசு உதவி பெறும் கல்லூரி களில் காலிப் பணியிடம் ஏற்படும் போது சம்பந்தப்பட்ட துறை சுய நிதிப் பிரிவில் பணிபுரிவோரை நிரந்தரமாக்கக் கல்லூரி நிர்வாகம் முயற்சி செய்கிறது. நிர்வாகத்துக்கு வேண்டியவர்கள் எனில் முன் கூட்டியே தற்காலிகப் பணியில் அமர்த்திவிட்டு காலி யிடம் வரும்போது நிரந்தர உதவிப் பேராசிரியராக வாய்ப்பளிக்கின்றனர். நேர்முகத் தேர்வில் பங்கேற்போர் திறமை இருந்தாலும் வாய்ப்பு கிடைப் பதில்லை. அரசு உதவி பெறும் கல் லூரிகளில் நியமனம் குறித்து ஆய்வு செய்தால் முறைகேடு தெரிய வரும் என்றார்.