Published : 19 Sep 2019 12:25 PM
Last Updated : 19 Sep 2019 12:25 PM

பேனர்கள் வைப்பதை முறைப்படுத்த என்ன செய்யலாம்? டிஜிட்டல் பிரிண்டர்ஸ், திருமண மண்டப உரிமையாளர்களுடன் ஆலோசனை

புதுச்சேரி

புதுச்சேரியில் பெருகி வரும் பேனர் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பதை முறைப்படுத்துவது தொடர்பாக டிஜிட்டல் பிரிண்டர்ஸ் உரிமையா ளர்கள் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்களுடன் புதுச்சேரி உள்ளாட்சித்துறை இயக்குநர் மலர்க்கண்ணன் நேற்று ஆலோ சனை கூட்டம் நடத்தினார்.

இதில் புதுச்சேரி நகராட்சி ஆணையர் அர்ஜூன ராமகிருஷ்ணன், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, வில்லியனூர் கொம் யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறு முகம், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர்ராஜன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் தமிழரசன், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து உதவி பொறியாளர் கருத் தாயன் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்துக்கு பின்னர் உள் ளாட்சித்துறை இயக்குநர் மலர்க் கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது;

புதுச்சேரி மாநிலத்தில் திறந்த வெளி விளம்பரத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. ஆனால், சில இடங்களில் பேனர்கள் வைக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. அனுமதி இல்லாத இடங்களில் பேனர்கள் வைக்கப்படுகின்றன.

பொது இடத்தில் திறந்தவெளி யில் பேனர்கள் வைக்க கூடாது. அனுமதி அளிக்கப்பட்ட குறிப்பிட்ட இடங்களில் தான் பேனர்கள் வைக் கப்பட வேண்டும்,

திருமண மண்டப வளாகத்தில் இரண்டு பேனர்கள் மட்டும் 10 அடிக்கு 10 அடி அளவில் வைக்க அனுமதி அளிக்க முடிவு செய்துள் ளோம். இதற்கான ஆணை பிறப் பிக்கப்படும். பேனர்களில் அனுமதி எண், அச்சகத்தின் பெயர் இடம் பெற வேண்டும் என்ற விதி முறையையும் வலியுறுத்தியிருக்கிறோம்.

விதிமுறைகள் கடைபிடிக்காத, பேனர்கள் வைக்கப்பட்டால் அந்த பேனர்களை அச்சிட்டு கொடுத்த பிரிண்டர்ஸ்க்கு நகராட்சிகள் மூலம் கொடுக்கப்பட்டிருந்த வர்த்தக உரி மம் ரத்து செய்யப்படும். அதுபோல் விதிமுறை கடைபிடிக்காத வகை யில் திருமண மண்டபங்கள் முன் வைக்கப்படும் பேனர்களுக்கும் மண்டபங்களுக்கான உரிமைகளும் ரத்து செய்யப்படும். மேலும் காவல் துறை மூலமும் நடவடிக்கை எடுக் கப்படும்.

ரோந்துப் பணி தொடக்கம்

பேனர்கள் அனுமதி பெறாமல் வைக்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 24 மணி நேர ரோந்துப் பணி நேற்று (நேற்று முன்தினம்) முதல் தொடங்கப் பட்டுள்ளது. சாலையின் நடுவில் உள்ள தடுப்புக்கட்டை பகுதிகளில் வைக்கப்படும் விளம்பரங்களுக்கு பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது. அதற்கான அனுமதி யும் உள்ளாட்சித் துறையிடமும் பெற வேண்டும் என்ற முறையையும் கொண்டு வருவோம் என்றார்.

பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் கூறுகையில், பேனர்களை அச்சிட்டு தருவதற்கான பல்வேறு விதிமுறை களை இயக்குநர் கூறினார். பேனரை பிரிண்ட் செய்து செல்பவர்கள் அனுமதி பெறாத இடத்தில் வைக் கிறார்கள் என்பது எப்படி எங்க ளுக்குத் தெரியும் ? அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க வேண்டுமென தெரிவிக்கின்றனர். அதுபோல் பேனர் விழுந்தால் பிரிண்டர்ஸ் உரிமையாளர்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பதற்கு உறுதி மொழிப்பத்திரம் எழுதித் தரவும் கேட்டுள்ளனர். இதை நாங்கள் ஏற் றுக் கொள்ளவில்லை என்றனர்.

திருமண மண்டப உரிமையாளர்கள் கூறுகையில், திருமண மண்டபவளாகத்துக்கு வெளியே வைக்கப்படும் பேனர்கள் விழுந் தால் திருமண மண்டப உரிமையா ளர்கள் எப்படி பொறுப்பேற்க முடியும்? ஆனால் அதற்காக மண்டப உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வோம் என்று ஆணையர் கூறியுள்ளதை நாங்கள் ஏற்கவில்லை. அனுமதியை மீறி அதிகளவு பேனர் வைப்பதற்கும், அது விழுந்தால் ஏற்படும் பாதிப்பிற்கும் வைப்பவர்களின் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x