Published : 19 Sep 2019 12:05 PM
Last Updated : 19 Sep 2019 12:05 PM

திருப்பூரில் ஒருவழிப்பாதையில் வாகனங்களை அனுமதிப்பதை கண்டித்து சாலையில் படுத்து போராட்டம் நடத்திய டிராபிக் ராமசாமி

திருப்பூர்

திருப்பூர் பல்லடம் சாலையில், டிகேடி பெட்ரோல் பங்க் எதிரில் நேற்று ஒருவழிப்பாதையில் வந்த இருசக்கர வாகனங்களை வழிமறித்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, ‘ஏன் ஒருவழிப்பாதையாக வருகிறீர்கள்? விபத்து நடந்தால் யார் பொறுப்பு? தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டலாமா?’ என கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில், வேகமாக வந்தவரை தடுத்து நிறுத்தி கேள்வி எழுப்பினார். ஆனால் வாகன ஓட்டுநர் உரிய பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மாநகர போலீஸாருக்கு தகவல் அளித்தார். சிறிதுநேரத்தில் அங்கு வந்த போக்குவரத்து போலீஸார், புகாரை பெறாமல் அங்கிருந்து சென்றதால், டிராபிக் ராமசாமி திடீரென திருப்பூர் -பல்லடம் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறும்போது, ‘பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றுகிறார்களா என் பதைக் கூட திருப்பூர் மாநகர போலீ ஸார் கண்டுகொள்வதில்லை. நான் புகார் அளித்த சம்பந்தப்பட்ட வாக னம் மற்றும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றேன். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கா மல் சென்றுவிட்டனர். எனவே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன். மாநகரில் போக்குவரத்து விதி மீறல்கள் மிகவும் அதிகளவில் உள்ளன’ என்றார்.

சிறிதுநேரத்தில் அவர் சாலையோ ரம் இருந்த மையத்தடுப்பில் சாய்ந்தபடி அமர்ந்தார். இதனால் வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டன. சிலர் டிராபிக் ராமசாமியுடன் செல்பி எடுத்தனர்.

மாநகர போலீஸார் அவரை சமாதானப்படுத்தி, புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x