

இரும்பு படிக்கட்டு மோதியதில் அந்தமான் செல்லும் விமானம் சேதமடைந்தது.
மும்பையில் இருந்து விமானம் ஒன்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றனர். இந்த விமானம் மீண்டும் 8.30 மணிக்கு அந்தமானுக்கு புறப்படுவதற்கு தயாரானது.
விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த 124 பயணிகள் பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு காத்திருந்தனர். ஏரோ பிரிட்ஜ் எனப்படும் பயணிகள் ஏறும் படிக்கட்டை விமானத்தில் பொருத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக விமானத்தின் மீது இரும்பு படிக்கட்டு மோதி யது. இதில் விமானத்தில் வாசல், ஜன்னல் பகுதி சேதமடைந்து ஓட்டை விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த விமான நிலைய அதிகாரிகள் விமானத்தின் சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்தனர். சேதமடைந்த பாகங்களை உடனடியாக சரி செய்ய முடியாததால், விமானத்தை ரத்து செய்தனர். பயணி கள் அனைவரும் அருகில் உள்ள ஓட்டல்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். பழுது சரிசெய்யப்பட்ட பிறகு அந்த விமானம் அந்தமான் புறப்பட்டுசெல்லும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.