

தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம் பட்டினம் அருகே உள்ள வள்ளி கொல்லைக்காடு கிராமத்தில் வீடு ஒன்றில் நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது,, 5 அடி உயரம், 500 கிலோ எடை கொண்ட உலோகத் தாலான பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் பொக்லைன் மூலம் தோண்டி பார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, நேற்று முன் தினம் இரவு 11 மணி அளவில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், நடராஜர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஎஸ்பிக்கள் ராஜாராம், மலைச்சாமி, டிஎஸ்பிக்கள் சந்திர சேகரன், முகேஷ், அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்நிலையில், நேற்று 10-க்கும் மேற்பட்ட சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வள்ளி கொல் லைக்காடு பகுதியில் உள்ளவர் களிடம் நடராஜர் சிலை தொடர்பாக விசாரணை நடத்தினர். சிலை தற் போது அதிராம்பட்டினம் அபயவர தேஸ்வரர் கோயிலில், பாதுகாக்கப் பட்ட அறையில் வைக்கப்பட்டுள் ளது. அறநிலையத்துறை அதிகாரிக ளும் கோயிலில் முகாமிட்டுள்ளனர்.
இதுகுறித்து பொன்மாணிக்க வேல் கூறியது: கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலை பழமையானதாக உள்ளது. இதுதொடர்பாக தொல்லி யல் துறையினர் ஆய்வு செய்து, அளிக்கும் அறிக்கையில்தான் சிலை எந்த நூற்றாண்டைச் சேர்ந் தது என்பது தெரியவரும்.
இந்த சிலை எந்த கோயிலுக்கு உரியது, ஏதேனும் கோயிலில் நடராஜர் சிலை காணாமல்போன புகார் உள்ளதா என விசாரித்து வருகிறோம் என்றார்.