Published : 19 Sep 2019 09:42 AM
Last Updated : 19 Sep 2019 09:42 AM

திருப்பதி தேவஸ்தான அறங்காவலராக இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் மீண்டும் நியமனம்

சென்னை

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவரும், மேலாண் இயக்குநருமான என்.சீனிவாசன் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறங்காவலர் குழு உறுப்பினராக மீண்டும் நியமிக் கப்பட்டுள்ளார்.

திருமலை திருப்பதி தேவஸ் தான போர்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் களை நியமித்து ஆந்திர மாநில அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர் குழு தலை வராக ஒய்.வி.சுப்பா ரெட்டி நிய மிக்கப்பட்டுள்ளார். இந்தியா சிமென்ட்ஸ் துணைத் தலைவர் என்.சீனிவாசன் உட்பட 28 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

2 முறை உறுப்பினர்

இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன துணைத் தலைவர் என்.சீனி வாசன், திருமலை திருப்தி தேவஸ் தான போர்டு அறங்காவலர் குழுவில் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை இரண்டு முறை உறுப்பினராக இருந்துள்ளார்.

அவர் அங்காவலர் குழு உறுப் பினராக இருந்த காலகட்டத்தில், அவரது சீரிய பங்களிப்பு காரண மாக மிகவும் பிரபலமான திருப்பதி லட்டு மற்றும் பூந்தி ஆகியவற்றின் தரம் மேம்படுத்தப்பட்டது. மேலும் ஆண்டு முழுவதும் பல்வேறு கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டுகளை எடுத்துச் சென்று விநியோகிப்பதையும் முறைப்படுத்தியுள்ளார்.

இவர் தனது சொந்த ஆர்வத் தின் காரணமாக, ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில், கன்வேயர் பெல்ட் வசதி ஏற்படுத்தி, உற்பத்தி செய்யும் இடத்திலிருந்து, விநி யோகிக்கும் இடத்துக்கு லட்டு களை கொண்டு செல்வதை எளிமைப்படுத்தினார். இதற்கான செலவை அவரே ஏற்றார். இந்த சேவையை அறிமுகப்படுத்தியதன் மூலம் தினமும் சுமார் 3 லட்சம் லட்டுகளை எளிதாக கையாள முடிந்தது. இந்த சேவை மற்றும் அவரது முயற்சியால் திருமலை கோயில் மட்டுமல்லாது, நாட் டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கும் லட்டுகளை கொண்டு செல்வது எளிதாக்கப் பட்டது. இந்த சேவை கடந்த 2007-ம் ஆண்டு முதல் எந்த இடையூறும் இன்றி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அடுத்த கட்டமாக, லட்டு உற்பத்தியை மேலும் அதிகரிக்க, இவர் ரூ.3 கோடி செலவில், 20 அடுமனைகளைக் கொண்ட, கூடுதல் கன்வேயர் பெல்ட் வசதி களுடன் கூடிய இரு நவீன பூந்தி தயாரிப்பு கூடங்களை ஏற்படுத்த உதவினார். அது கடந்த 2010-ம் ஆண்டு செயல்பாட்டுக்கு வந் தது. அப்போதிலிருந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தினமும் 5 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக் கான பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவரது சிறந்த சமூக சேவை, மனிதநேய அறப்பணிகளை அங்கீகரிக்கும் வகையில், அவர் மீண்டும் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x