Published : 19 Sep 2019 09:30 AM
Last Updated : 19 Sep 2019 09:30 AM

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப்படுகிறது: அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது

சென்னை

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக் கான பாடங்கள் 5-ஆக குறைக்கப் பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வு மதிப்பெண் 600-ல் இருந்து 500-ஆக குறைகிறது. மேலும், மாணவர்களே விரும்பிய பாடங் களை தேர்வு செய்து கொள்ள லாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வியில் பாடத் திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வரு கின்றன. அந்தவகையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முறை களில் பள்ளிக்கல்வித் துறை சில மாற்றங்களை செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்ட அர சாணை:

மாணவர்கள் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்றதாக வும், மனஅழுத்தத்தை குறைக் கும் வகையிலும் மேல்நிலை வகுப்புகளுக்கு தற்போது உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளு டன், புதிதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை நடைமுறைப் படுத்த தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியக்குழு ஒப்பு தல் வழங்கியுள்ளது. இந்த புதிய முறையை அமல்படுத்த தேர்வுத் துறை இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது.

இதையேற்று மேல்நிலை வகுப்புகளுக்கு தற்போது உள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளு டன், புதிதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி மாண வர்கள் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மை பாடங்களில் ஏதேனும் 3 பாடங் களை மட்டும் தேர்வு செய்து எழுதிக் கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் 4 முதன்மை பாடங்களையும் சேர்த்து எழுதலாம். எனினும், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்து எழுதும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும். இந்த புதிய மேம் படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு அடுத்த கல்வியாண்டு (2020-21) முதல் பிளஸ் 1 வகுப்பில் அமலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத் தில் தற்போது ஒவ்வொரு பிரிவி லும் தமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்கள் உள்ளன. ஒரு பாடத் துக்கு தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 600 மதிப்பெண் களுக்கு மாணவர்கள் தேர்வு எழுது கின்றனர்.

புதிய நடைமுறையின் படி இனி மாணவர்கள் தங்கள் விருப்பத்தின்படி 5 பாடங்களை மட்டும் தேர்வு எழுதிக் கொள்ள லாம். அதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.

இதர முதன்மை பாடங்களில் பிடித்தமான 3 பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு 500 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். அதேநேரம் விருப்ப முள்ள மாணவர்கள் பழைய நடை முறையின்படி மொத்தமுள்ள 6 பாடங்களையும் சேர்த்து தேர்வு எழுதலாம். அவர்களுக்கு 600 மதிப் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப் படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x