Published : 19 Sep 2019 09:26 AM
Last Updated : 19 Sep 2019 09:26 AM

இந்தியாவில் முதல் முறையாக அறுவை சிகிச்சை மூலம் 7 வயது சிறுவனின் தாடையில் இருந்த 1.5 கிலோ கட்டி அகற்றம்:  சென்னை அரசு பல் மருத்துவமனை சாதனை

சென்னை

இந்தியாவில் முதல் முறையாக சென்னை அரசு பல் மருத்துவ மனையில் 7 வயது சிறுவனின் தாடையில் இருந்த 1.5 கிலோ கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் வினோத். ஆட்டோ ஓட்டுநர். இவரது மனைவி பிரியா. இவர்களின் மகன் எபினேசன் (7). தனது தாடைப் பகுதியில் வேக மாக வளர்ந்த கட்டியால், எபி னேசன் கடந்த ஒன்றரை ஆண்டுக ளாக சாப்பிடவும், பேசவும் முடியா மல் அவதிப்பட்டு வந்தான். கட்டி பெரிய அளவில் இருந்ததால் முகமே விகாரமானது.

இதனால் மனவேதனை அடைந்த எபினே சனின் பெற்றோர், தங்கள் மகனை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், மரபுவழி கோளாறு காரணமாக கட்டி உருவாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வாய்முக அறுவை சிகிச்சை டாக்டர்களுடன் கலந் தாலோசித்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிராட்வேயில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறு வன் அனுமதிக்கப்பட்டான். மருத்துவமனை முதல்வர் ஞா.விமலா வழிகாட்டுதலின்படி வாய்முக அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சி.பிரசாத், டாக்டர்கள் ஜே.பாலாஜி, கே.அருண்குமார், மயக்கவியல் டாக்டர் கிருஷ்ணன், குழந்தைகள் நல அறுவை சிகிச்சை டாக்டர் முத்துக்குமார் ஆகி யோர் கொண்ட குழுவினர் சுமார் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் தாடையில் இருந்த 1.5 கிலோ கட்டியை வெற்றி கரமாக அகற்றினர்.

சிகிச்சைக்கு பின்னர் சிறுவ னால் நன்றாக சாப்பிடவும், பேச வும் முடிகிறது. சிறுவன் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித் தனர். இதை அறிந்த சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்று சிறுவனுக்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினரை பாராட்டி கவுரவித்தார். அப்போது, அமைச் சர் மற்றும் டாக்டர்களுடன் இணைந்து சிறுவன் கேக் வெட்டி கொண்டாடினான்.

பின்னர் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவில் முதல் முறையாக இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்து சிறுவனின் தாடையில் இருந்த 1.5 கிலோ கட்டி அகற்றப்பட்டுள்ளது. உலக அள வில் இதுவரை 55 பேருக்கு இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட் டுள்ளது. தனியார் மருத்துவமனை யில் பல லட்சங்கள் செலவாகும் இந்த அறுவை சிகிச்சை முத லமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

மரபு வழி கோளாறு

இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக வாய்முக அறுவை சிகிச்சை துறைத் தலைவர் சி.பிரசாத் கூறும்போது, “சிறுவனுக்கு தாடையில் ஏற்பட்ட கட்டி ஒரு வகையான மரபுவழியான கோளாறாகும். சிறுவனின் பாட்டிக்கு கீழ்தாடையில் இதுபோன்ற கட்டி இருந்துள்ளது. சிகிச்சைக்குப்பின் சில ஆண்டுகளில் அவர் இறந்துள்ளார். இதேபோல் சிறுவனின் பெரியம்மாவுக்கு இருந்த கட்டி சிறியதாக இருக்கும்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் நன்றாக இருக் கிறார். உயிருக்கு ஆபத்து ஆகி விடுமோ என்ற பயத்தில் கடைசி கட்டத்தில் சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

பற்களாக உருவாக வேண்டிய சில பாகங்கள் பெரிய கட்டியாக தாடையில் வளர்ந்துவிட்டன. இதை உரிய நேரத்தில் நீக்கா மல் இருந்திருந்தால் மூச்சு குழா யும், உணவு குழாயும் அடைத் திருக்கும் அபாயம் ஏற்பட்டிருக் கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x