Published : 19 Sep 2019 09:19 AM
Last Updated : 19 Sep 2019 09:19 AM

மின்கம்ப விபத்தில் ஒருவர் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் தங்கமணியின் கருத்துக்கு சிட்லபாக்கம் பகுதி மக்கள் மறுப்பு - ஆய்வுக்கு வந்த தடயவியல் நிபுணரிடம் வாக்குவாதம்

சென்னை

சிட்லபாக்கத்தில் நடந்த உயிரி ழப்புச் சம்பவம் தொடர்பாக மின் துறை அமைச்சர் தங்கமணியின் கருத்துக்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆய்வு செய்ய வந்த தடயவியல் நிபுணரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு நிலவியது.

சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் மின்துறை அமைச் சர் தங்கமணி கூறும்போது, “மின் கம்பம் சேதம் அடைந்ததால் சிட்லப் பாக்கத்தில் மின்சாரம் தாக்கி சேதுராஜ் என்ற நபர் உயிரிழந்த தாக கூறப்படுவது தவறான தகவல். அப்பகுதியில் சென்ற ஒரு லாரி மரத்தின் மீது மோதியதில், மரக்கிளை ஒன்று முறிந்து மின்சார ஒயரின் மீது விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்தது. அந்த லாரியை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதனிடையே அமைச்சரின் இந்த கருத்துக்கு அப்பகுதி மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். உயிரிழப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ஆய்வு செய்ய நேற்று வந்த காவல்துறை தடவியல் துறை உதவி இயக்குநர் சோபியாவிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர். பின்னர் அப்பகுதியை ஆய்வு செய்த சோபியா குடியிருப்புவாசிகளிடம் விசாரித்தார். சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன.

உயிரிழந்த சேதுராஜின் மனைவி சங்கரி கூறும்போது, “எங்கள் வீடு இருக்கும் தெரு முட்டு சந்து. விபத்துக்குளாக்கிய மின்கம்பம் தெருவின் கடைசியில் ஒரு ஓரமாகதான் இருந்தது. முழுவதும் சேதமடைந்திருந்த இந்த கம்பத்தில் இருந்து அடிக்கடி தீப்பொறி ஏற்படும். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் அலட்சியமாக இருந்தனர். இந்நிலையில் லாரி மோதி மின்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இது முட்டுச் சந்து என்பதால், இங்கு எந்த லாரியும் வர முடியாது” என்று கூறினார்.

இதனிடையே, சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் தாம்பரம் கோட்டம் முழுவதும் பழுதடைந்த மின் கம்பங்களை ஒரு வாரத்துக்குள் மாற்றம் செய்யுமாறு தாம்பரம் கோட்ட செயற்பொறியாளர் மின்வாரிய அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

விரைவில் புதிய சட்டம்

முன்னதாக அமைச்சர் பேட்டியின்போது கூறியதாவது: முகலிவாக்கத்தில் கடந்த 15-ம் தேதி நடந்த மின்விபத்து, மாநகராட்சி நிறுவிய மின்கம்பம் மூலம் நடந்ததாகவும் மாநகராட்சி, குடிநீர் வாரியம், பிஎஸ்என்எல் நிறுவனம் உள்ளிட்டவை தகவல் தெரிவிக்காமல் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டியதால் இத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதம் அடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள் மாற்றும் பணி நடக்கிறது. கடந்த 3 மாதங்களில் 62,688 கம்பங்கள் மாற்றப்பட்டன. 2,238 மின்கம்பங் கள் மாற்றும் பணியும் நடக்கிறது. மின்விநியோக பெட்டிகள் மீது நோட்டீஸ் ஒட்டுவதைத் தடுக்க விரைவில் புதிய சட்டம் வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, டான்ஜெட்கோ தலைவர் விக்ரம் கபூர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x