Published : 19 Sep 2019 09:11 AM
Last Updated : 19 Sep 2019 09:11 AM

ரயிலிலும் உருவெடுத்த ‘ரூட் தல’ பிரச்சினை: கடற்கரை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் - கல்வீச்சில் 3 பயணிகள் காயம்

சென்னை

கடற்கரை ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் கற் களை வீசி மோதிக் கொண்டதில் 3 பயணிகள் காயம் அடைந்தனர்.

சென்னை பச்சையப்பன் கல் லூரி மாணவர்கள் சில மாதங்க ளுக்கு முன்பு பேருந்துக்குள் பட் டாக் கத்தி போன்ற ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். கத்தியுடன் சக மாணவரை விரட்டிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்த விவகாரத்தில் போலீஸா ரும் தீவிர நடவடிக்கையில் இறங் கினர். வன்முறையில் ஈடுபட்ட 90 மாணவர்களிடம் இனிமேல் இது போல் நடந்துகொள்ள மாட்டேன் என்று உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. வன்முறையில் ஈடுபட்ட 9 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால் அமை தியாக கல்லூரி சென்று வந்த மாணவர்கள், நேற்று மீண்டும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேற்று மாலை 3 மணியளவில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் சிலர் ரயிலில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர். அப்போது, அதே கல்லூரியைச் சேர்ந்த மேலும் சில மாணவர்கள் ரயில் நிலையத்துக்கு வந்தனர். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறியது. பயணி களுக்கு இடையே ஒருவரையொரு வர் விரட்டிச் சென்று தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சில மாணவர்கள் தண்ட வாளத்தில் இறங்கி, அங்கிருந்த கற் களை எடுத்து எதிர் தரப்பு மாணவர் கள் மீது சரமாரியாக வீசினர். இதில் 3 பயணிகள் காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத் துக்கு ரயில்வே போலீஸார் வந் தனர் அவர்களைக் கண்டதும் தாக் குதலில் ஈடுபட்ட மாணவர்கள் ஓடி விட்டனர். இந்நிலையில் அங்கு நின்று கொண்டிருந்த 5 மாணவர் களை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார், தாக்குதல் நடத் திய மாணவர்கள் குறித்து அவர்களி டம் விசாரணை மேற்கொண்டனர்.

பேருந்தைப் போல ரயிலிலும் ‘ரூட் தல’ பிரச்சினை உள்ளது. இந்த விவகாரத்தில்தான் இரு தரப்பு மாணவர்களும் மோதிக் கொண்ட தாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x