

சென்னை
எந்த மொழியும் தமிழை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் அனு மதிக்க மாட்டோம் என்று முன் னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம் பரம் கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், முக்கியப் பிரச் சினைகள் குறித்து தனது குடும் பத்தினர் மூலம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்தியா வின் பொது மொழியாக இந்தி மட் டுமே இருக்க முடியும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வின் கருத்து குறித்து ட்விட்டரில் ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:
தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டுள்ளது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது. தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழிதான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய் வதற்கு ஒருநாளும் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம். இந்தி பேசாத அல்லது இந்தியை தாய் மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்து பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறி யுள்ளார்.