Published : 18 Sep 2019 02:05 PM
Last Updated : 18 Sep 2019 02:05 PM

தனி மாவட்டம் அமைக்கக் கோரி சங்கரன்கோவிலில் கடை அடைப்பு: 5,000 விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை 

சங்கரன்கோவில்

சங்கரன்கோவிலை தலைமையிட மாக கொண்டு மாவட்டம் அமைக்க வலியுறுத்தி அங்கு நேற்று கடை அடைப்பு மற்றும் பேரணி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி மாவட்டம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித் தார். தொடர்ந்து, இதற்கான ஆரம் பக் கட்ட பணிகள் தொடங்கி யுள்ளன.

இணைக்க எதிர்ப்பு

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளை இணைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட சிலர் சங்கரன்கோவில், திருவேங்கடம் தாலுகாக்களை தென்காசி மாவட்டத்தில் இணைக்கக் கூடாது என்று வலியுறுத்தி அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். இது தொடர்பாக மதிமுக சார்பில் சங்கரன்கோவிலில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

சங்கரன்கோவிலை தலைமை யிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்று வலி யுறுத்தி சங்கரன்கோவில் மாவட்டம் கோரிக்கை இயக்கத்தினர், அனைத் துக் கட்சியினர், பல்வேறு அமைப்பு கள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியோர் இணைந்து மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தி வரு கின்றனர். மாநில ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜ லெட்சுமி, வாசுதேவநல்லூர் எம்எல்ஏ மனோகரன் ஆகியோரை சந்தித்து இது தொடர்பாக மனுக் களும் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் சங்கரன் கோவிலை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைக்க தமிழக அரசின் கவனத்தை ஈர்க் கும் வகையில் நேற்று சங்கரன் கோவிலில் கடை அடைப்பு,பேரணி, மற்றும் பொதுவேலை நிறுத்தத் துக்கு அழைப்பு விடுக்கப்பட் டிருந்தது.

இதற்கு நகை வியாபாரிகள் சங்கம், நகர வர்த்தக சங்கம், திரு வேங்கடம்சாலை வியாபாரிகள் சங்கம், திருவள்ளுவர்சாலை வியா பாரிகள் சங்கம், காய்கறி வியாபாரி கள் சங்கம், பாத்திர வியாபாரிகள் சங்கம்,மாஸ்டர் வீவர்கள் சங்கம், சிறு விசைத்தறியாளர்கள் சங்கம், முடிதிருத்துவோர் சங்கம் உள் ளிட்ட பல்வேறு சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்திருந்தனர். ஹோட்டல் கள், தேநீர் கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. நூற்றுக்கணக்கான ஆட்டோக்களும் இயங்கவில்லை.

மேலும், சங்கரன்கோவிலில் உள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் மூடப்பட்டி ருந்தன. இவற்றில் பணிபுரியும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழி லாளர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள், நகரில் பேரணியாகச் சென்று, சங்கரன்கோவில் தாலுகா அலுவல கத்தில் வட்டாட்சியர் ஆதி நாராயண னிடம் மனு அளித்தனர்.

திருவேங்கடம் தாலுகாவில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டி ருந்தன. கடையடைப்பு மற்றும் பேரணியை முன்னிட்டு சங்கரன் கோவிலில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x