Published : 18 Sep 2019 11:54 AM
Last Updated : 18 Sep 2019 11:54 AM

அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கோரிக்கை

செங்குன்றம்

திருவள்ளூர் மாவட்டம், செங்குன் றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் மக்களுக்கு தேவையான குடிநீரை ஊராட்சி நிர்வாகம் முறையாக வழங்குவ தில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர், ஆட்டந்தாங்கல், விஜயநல்லூர் உள்ளிட்ட பகுதி களில் 18 ஆழ்துளை கிணறுகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு, நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலம் சென் னையில் உள்ள நட்சத்திர விடுதி கள், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு விற்கப்பட்டு வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த நிலத்தடி நீர் திருட்டு தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், நல்லூர் ஊராட் சியில் உள்ள சட்டவிரோத ஆழ் துளை கிணறுகளை அகற்ற வேண்டும் எனக் கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மற்றும் பொதுமக்கள் சார்பில் நேற்று நல்லூர் - காந்தி நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திருவள் ளூர் மாவட்ட செயலாளர் மாரியப் பன், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாநில தலைவர் சுசிலா, முன்னாள் எம்எல்ஏ ஏ.எஸ்.கண்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பங்கேற்று, கோரிக்கை முழக்க மிட்டனர்.

காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. நீண்ட நேரத்துக்கு பிறகு, சம்பவ இடத்துக்கு வந்த பொன்னேரி வட்டாட்சியர் வில்சன், நல்லகண்ணு உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில், ‘‘நல்லூர் ஊராட்சியில் செயல்படும் சட்ட விரோத ஆழ்துளை கிணறுகளை ஒரு வாரத்தில் அகற்ற நடவ டிக்கை எடுக்கப்படும்’’ என, உறுதி யளித்தார். இதையடுத்து, மதியம் 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.

இதுகுறித்து நல்லகண்ணு தெரிவித்ததாவது:

சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கத்தில் விற்பனை செய்பவர்களுக்கு அமைச்சர்களும், அதிகாரிகளும் உடந்தையாக இருக்கின்றனர். உள்ளூர் மக்களுக்கான குடிநீரை முதலில் உறுதிப்படுத்திவிட்டு, பிறகு வெளியூருக்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். தண்ணீரை வியாபாரமாக்காமல் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

ஆறுகளில் நடைபெற்ற மணல் கொள்ளையே தமிழகத்தில் நிலத் தடி நீர் பாதிப்புக்கு காரணம். மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தாலும் அதை விவசாயத்துக்கு முழுமை யாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகவே, தமிழக அரசு நீர் மேலாண்மையில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x