Published : 18 Sep 2019 11:47 AM
Last Updated : 18 Sep 2019 11:47 AM

லேண்டர் தகவல் தொடர்பை மீட்டெடுப்பதில் பின்னடைவு

சென்னை

நிலவில் சூரிய வெளிச்சம் குறையத் தொடங்கியதால், லேண்டர் தொடர்பை மீட்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

நிலவில் தரையிறங்கி ஆராய்வ தற்காக சந்திரயான்-2 விண் கலத்தை இஸ்ரோ ஜூலை 22-ல் விண்ணில் செலுத்தியது. செப்டம்பர் 2-ம் தேதி சந்திரயா னில் இருந்து ஆர்பிட்டர் பிரிந்து, நிலவை சுற்றத் தொடங்கியது. செப்டம்பர் 7-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் நேரத்தில் சுமார் 2.1 கி.மீ. தூரத் துக்கு முன்பாக லேண்டர் உடனான தகவல் தொடர்பு துண்டானது.

தரையிறங்க வேண்டிய இடத் தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பது, ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. ஆனால், கடந்த 11 நாட்களாக முயற்சித்தும் லேண்டருடனான தொடர்பை மீட்க முடியவில்லை. இந்த முயற்சிகள் 20-ம் தேதி வரை தொடரும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

இந்த சூழலில், நிலவின் தென் துருவத்தில் சூரிய வெளிச் சம் குறைந்து இருள் பரவத் தொடங்கியுள்ளது. 20-ம் தேதிக்கு பிறகு தென்துருவத்தில் இரவு வந்துவிடும் என்பதால், லேண்டரை தொடர்பு கொள்ளும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ட்விட்டரில் இஸ்ரோ நேற்று வெளியிட்ட பதிவில், ‘‘எங்களு டன் நின்ற அனைத்து மக்களுக் கும் நன்றி. உலகெங்கும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள், கனவுகளால் உந்தப்பட்டு நாம் அடுத்தகட்ட பயணங்களை நோக்கி தொடர்ந்து முன்னேறு வோம்’’ என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x