

சென்னை
சென்னையை அடுத்த பேரூரில் தினசரி 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இத்திட்டத்துக்கு கடந்த 2018-ம் ஆண்டு திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு ரூ.4 ஆயிரத்து 70 கோடியே 67 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்பின் இத்திட்டத்தை நிறை வேற்ற தற்போது ரூ.6 ஆயிரத்து 78 கோடியே 40 லட்சத்துக்கு திருத்திய திட்ட மதிப்பீடு தயாரிக்கப் பட்டு, ஜப்பான் பன்னாட்டு கூட் டுறவு முகமையிடம் நிதி கோரப் பட்டது. அந்நிறுவனம் 85 சதவீதம் நிதி அளிக்க ஒப்பதல் அளித்தது. மீதமுள்ள நிதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள ஒப்பந்தம் போடப் பட்டது.
அதன்படி, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை ரூ.4 ஆயிரத்து 267 கோடியே 70 லட்சம் நிதியுதவி வழங்குகிறது. மீதமுள்ள ரூ.1,810.70 கோடி தமிழக அரசு வழங்குகிறது.
இந்நிலையில், இத்திட்டத்துக் கான நிர்வாக ஒப்புதல் அளித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடி நீர் வழங்கல் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து இத்திட்டத்துக்கு விரைவில் அடிக் கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.