நிலமோசடிப் புகாரில் நேரில் ஆஜராக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன்
சென்னை
நிலமோசடி புகாரில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு, சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை யில் உள்ள குரோம் லெதர் தொழிற்சாலைக்கு சொந்தமாக இருந்த நிலங்கள், 1982-ல் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் நகர்ப்புற நில உச்சவரம்பு சட் டத்தின் கீழ் அரசுடைமையாக்கப் பட்டது. அந்த நிலங்களை நீராதா ரங்களுக்கு பயன்படும் வகையில் 1984-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிலையில், 1996-ல் குரோம் தோல் தொழிற்சாலை தலைவராக இருந்த ஜெகத்ரட்ச கன், 1.55 ஏக்கர் நிலத்தை நகர்ப் புற நிலஉச்சவரம்பு சட்டத் தின் விதிகளை மீறி, 41 பயனாளி களுக்கு பிரித்துக் கொடுத் ததாக கூறப்படுகிறது. நீராதாரங் களுக்கு பயன்படும் வகையில் ஒதுக்கப்பட்ட நிலத்தை, தனிநபர் களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டதாக ஜெகத்ரட்சகன் மீது புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக தொடரப் பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், புகார் குறித்து விசாரிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இந்த புகார் குறித்து சிபிசிஐடி போலீ ஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 23-ம் தேதி, ஆஜராகு மாறு ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
