அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி: காங்கிரஸ் அறிவிப்பு

அமித் ஷாவுக்கு கருப்புக் கொடி: காங்கிரஸ் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை

தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவ னில் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா அக். 2 முதல் 9-ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு கொண்டாடப்படும். அக்.3 முதல் 9 வரை அனைத்து மாவட்டங்களிலும் பாதயாத்திரை நடைபெறும்.

இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழி மட்டுமே இருக்க முடியும் என்று கருத்தை ஏற்க முடியாது. அமித் ஷாவின் கருத்தை கண்டித்து அவர் தமிழகம் வரும்போது காங்கிரஸ் சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in