‘பேக்கேஜ் டெண்டர்’ முறைக்கு எதிரான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்

‘பேக்கேஜ் டெண்டர்’ முறைக்கு எதிரான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

மதுரை

தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணிகளைச் சேர்த்து டெண்டர் கோரும் ‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஆண்டநல்லூரைச் சேர்ந்த ஆர்.முகுந்தன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் பொதுப்பணித் துறையில் கடந்த 50 ஆண்டுகளாக ஒவ்வொரு திட்டப்பணிக்கும் தனித்தனியாக டெண்டர் கோரும் நடைமுறை அமலில் இருந்தது. இதனால் ஒன்று முதல் 5 நிலைகளில் உள்ள ஒப்பந்ததாரர்களும் பயன டைந்தனர்.

இந்நிலையில் பொதுப்பணித் துறையில் பேக்கேஜ் டெண்டர் (பல பணிகளுக்கு ஒரே டெண்டர்) முறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த முறை மாநில அளவில் பெரிய அள விலான 10 ஒப்பந்த தாரர் களுக்கு மட்டுமே பயனளிக்கும்.

ஒப்பந்தத் தொழிலில் உள்ள 5 ஆயிரம் ஒப்பந்ததாரர்களுக்குப் பாதிப்பு ஏற்படும். இதனால் பேக் கேஜ் டெண்டர் முறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேக் கேஜ் டெண்டர் முறையை அமல் படுத்தப்போவதில்லை என பொதுப் பணித் துறை சார்பில் தெரிவிக் கப்பட்டது.

ஆனால், மீண்டும் பேக்கேஜ் டெண்டர் முறை அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் 15.2.2019-ல் அரசாணை பிறப்பித்துள்ளார். இது பேக்கேஜ் டெண்டர் முறைக்கு எதிரான வழக் கில் உயர் நீதிமன்றம் 21.2.2018-ல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது.

மதுரை பொதுப்பணித் துறை மருத்துவப் பணிகள் பிரிவு கண் காணிப்புப் பொறியாளர், மதுரை மண்டல பொதுப்பணித் துறை சிறப்பு தலைமைப் பொறியாளர் ஆகியோர் பேக்கேஜ் டெண்டர் தொடர்பாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ளனர். இந்த ஆணையை ரத்து செய்ய வேண்டும். பேக்கேஜ் டெண்டருக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

அக்.14-ல் விசாரணை

இந்த மனு நீதிபதி கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலர் பதி லளிக்க உத்தரவிட்டு விசார ணையை அக்.14-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in