Published : 18 Sep 2019 09:21 AM
Last Updated : 18 Sep 2019 09:21 AM

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக நான் வெளியிடும் புத்தகத்தில் பல உண்மைகள் வெளிவரும்: அமமுக நிர்வாகி புகழேந்தி தகவல்

கோவை

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக நான் ஒரு புத்தகம் வெளியிட உள்ளேன். அதில் பல உண்மைகள் வெளிவரும் என அமமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்தார்.

கோவையில் செய்தியாளர்களி டம் அவர் நேற்று கூறியதாவது: அமமுகவில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக தினகரன் கூற வில்லை. பொதுச்செயலரும் என்னை நீக்கியதாக தெரிவிக்க வில்லை. ஆனாலும், கட்சி நிர் வாகிகள் நீக்கப்பட்டதில் அநீதி நிகழ்ந்திருக்கிறது. மண்டல பொறுப்பாளர்களால் அமமுக பாதி அழிந்துவிட்டது. மாற்று நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.

42 தொகுதியை ஒரே நிர்வாகி கவனித்தால், கட்சியை எப்படி நடத்த முடியும். நான் எந்தக் கட்சிக் கும் போவதாக இல்லை. அது போன்ற முடிவை நான் எடுக்க வில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக நான் ஒரு புத்தகம் வெளியிட உள்ளேன். அதில் பல உண்மைகள் வெளிவரும். நான் பல்வேறு பிரச்சினைகளை சந் தித்து வருகிறேன். தேசத் துரோக வழக்கு, வருமான வரி சோதனை உள்ளிட்டவற்றையும் சந்தித்து வருகிறேன்.

தினகரன் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். சசிகலாவை சிறையில் சந்தித்து, நிறைய பேசி னேன். அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு செல்பவர்களுக்கு எந்த பொறுப்பும் கொடுக்கப்படு வதில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x