

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்த வர் மாரியப்பன் (30). இவர், அப் பகுதியில் பாத்திரக் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை வீரவநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற மாரியப்பன், 3 பேர் கும்பலால் கொலை செய் யப்பட்டார். ஏற்கெனவே, சேரன் மகாதேவியில் நடைபெற்ற கொலைக்கு பழிக்குப் பழி யாக, மாரியப்பன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
வீரவநல்லூர் காவல் ஆய் வாளர் சாம்சன், துறை ரீதியான பயிற்சிக்கு சென்றுள் ளார். இதனால், இவ்வழக்கை விசாரிக்குமாறு, வீரவநல்லூர் பொறுப்பு ஆய்வாளரான சேரன்மகாதேவி ராஜாராமுக்கு, எஸ்பி உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் சம்பவ இடத்துக்குச் சென்றார். அங்கு, சேரன்மகாதேவி ஆய்வாளர் ராஜாராம் மது போதையில் இருந்தாராம்.
உடனடியாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ராஜாராம் அழைத்துச் செல்லப்பட்டு பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டதில், அவர் மதுபானம் அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.
ராஜாராம் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, திருநெல்வேலி சரக டிஐஜிக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவர் மீதான நடவடிக்கை குறித்து விரைவில் தெரியவரும்.