Published : 18 Sep 2019 08:10 AM
Last Updated : 18 Sep 2019 08:10 AM

5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வில் இருந்து 3 ஆண்டுகள் விலக்கு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

தமிழகத்தில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதில் இருந்து, மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப் பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

பெரியார் பிறந்தநாளையொட்டி ஈரோடு பெரியார், அண்ணா நினைவகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தி யாளர்களிடம் அவர் கூறிய தாவது:

காலாண்டுத் தேர்வுக்குப் பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என்பது வதந்தி. மத்திய அரசின் மூலமாக மகாத்மா காந்தியின் பிறந்தநாளை பள்ளிக்கல்வித் துறையின் மூலம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காந்தி ஜெயந்தியன்று அவரது படம் வைக்கப்பட்டு, விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இது தொடரும்.

அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற முறையில் மத்திய அரசால் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படு கிறது.

நமது மாநிலத்தின் நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 3 ஆண்டு காலம் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால கட்டத்தில் மாணவர்கள் தங்களது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. எனவே, அடுத்த 3 ஆண்டுகளுக்கு தற்போது என்ன நிலை உள்ளதோ, அதுவே தொடரும்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப் பில் முன்னுரிமை கொடுக்க வேண் டும் என்பது போன்ற கொள்கை முடிவுகளை முதல்வர்தான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இருமொழிக் கொள்கைதான்

முன்னதாக கோபியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘‘ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இணையதளத்தின் மூலம் வழங்கப்படும். சிறப்பு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தமிழகத் தில் இருமொழிக்கொள்கைதான் என்பதை அண்ணா உறுதிசெய்தார். அதைத்தொடர்ந்து எம்ஜிஆர், ஜெயலலிதாவும் இந்த கொள்கையில் உறுதியாக இருந்தனர். தற்போது ஜெயலலிதாவின் வழியில் நடைபெறும் இந்த ஆட்சியும், தமிழகத்தில் இருமொழி கொள்கைதான் என்பதில் உறுதியாக உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x