

சென்னை
மோடிக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்ததால், பாஜக ஆதர வாளராக என் மீது முத்திரை குத்துகின்றனர் என்று மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் நடிகர் ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்
நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின் றனர். கடந்த 2017-ம் ஆண்டு தனது அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த், இதைத்தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றினார்.
ஆனால், அதன் பின் இதுவரை கட்சி ஆரம்பிப்பது குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. மக்களவை தேர்தல் வந்த போது அரசியல் பிரவேசம் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் தனது இலக்கு சட்டப்பேரவை தேர்தல் தான் என்று அறிவித்ததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும், மறைமுகமாக தனது அரசியல் ஆலோசகர்களுடன் இணைந்து புதிய கட்சிக்கான வியூகங்களை வகுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், பிரதமர் மோடிக்கு ஆதரவான கருத்து களை ரஜினிகாந்த் தெரிவித்ததால், அவரை பாஜக ஆதரவாளர் என்று சிலர் விமர்சிக்க தொடங்கினர். சிறுபான்மையினர் மத்தியில் அவருக்கான ஆதரவை குறைக்கும் வகையில் அந்த விமர்சனங்கள் அமைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ‘தர்பார்’ திரைப்பட பணிகளை முடித்து விட்டு, சென்னை போயஸ் தோட்ட வீட்டில் ஓய்வில் இருக்கும் ரஜினிகாந்த், கடந்த சில தினங் களாக மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் அரசியல் துறையைச் சேர்ந்த நண்பர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
அப்போது ரஜினிகாந்த் சொன்ன தாக சில நிர்வாகிகள் கூறியதாவது:
மக்கள் மன்ற நிர்வாகிகளின் செயல்பாடுகள், தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்கள் செய்த பணிகள் குறித்து ரஜினிகாந்த் கேட்டறிந்தார். அடுத்த ஆண்டு இயக்கம் சார்பில் மாநாடு நடத்துவதற்கான பணிகள் குறித்து ஆலோசித்தார். அதற்கான இடம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.
பாஜகவுடன் தன்னை தொடர் புபடுத்தி வெளியாகும் செய்தி களால், தன் மீது பாஜக ஆதர வாளர் என்ற முத்திரை குத்தப் படுவதாகவும், ஆன்மிகப் பாதை யில் பயணிப்பேன் என்றதால் சிறுபான்மையினரிடம் இருந்து தன்னை விலக்கி வைக்க சிலர் முயற்சிப்பதாகவும் வேதனைப் பட்டார்.
சிறுபான்மையின மக்களை கவரும் வகையில் நம் செயல் பாடுகள் இருக்க வேண்டும். தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என்று மன்ற நிர்வாகிகளிடம் தெரிவித்தார்.
இவ்வாறு மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.