

திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு, பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சமூகநீதி ஊர்வலம் நடைபெற்றது.
திண்டுக்கல் குமரன் பூங்காவில் தொடங்கி கடைவீதி வழியாக மாநகராட்சி அருகேயுள்ள பெரியார் சிலையை ஊர்வலம் வந்தடைந்தது.
பெரியார் முகமூடி அணிந்தும், பெரியார் படங்களை கையில் ஏந்தியும் தாரை தப்பட்டைகள் முழுங்க நடந்த ஊர்வலத்தில் பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர்.
தொடர்ந்து பெரியார் சிலைக் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டன.
ஊர்வலத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வீரபாண்டி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் சம்பத், திமுக மாவட்ட துணைச் செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, நகரசெயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ஆசாத், விடுதலைச்சிறுத்தைகள் கிழக்கு மாவட்டசெயலாளர் அன்பரசு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர்.
தேசிய ஒருமைப்பாடு இயக்க மாநில தலைவர் அப்துல்ஜபார் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.