

சென்னை
கடலில் கேக் வெட்டி தமிழகத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா கொண்டாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்தநாளை குஜராத்தில் கொண்டாடி வருகிறார். அவருக்கு அமித் ஷா, மம்தா, ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
அதேபோல சமூக வலைதளங்களில் பலரும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதற்காக #HappyBdayPMModi, #happybirthdaynarendramodi, #HappyBirthdayPM, #NarendraModiBirthday போன்று பத்துக்கும் மேற்பட்ட ஹாஷ்டேகுகள் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன.
இதற்கிடையே அவரின் தீவிர ஆதரவாளர் ஒருவர் வாரணாசி சங்கட் மோச்சன் அனுமன் சிலைக்கு 1.25 கிலோ எடையில் தங்கத்தில் கிரீடம் செய்து தானமாக வழங்கியிருக்கிறார்.
தமிழகத்தில் மாநில பாஜக மாநில மீனவர் அணி சார்பில் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதற்காக மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் தலைமையில் 15 கிலோ எடைகொண்ட கேக், நடுக்கடலில் வெட்டப்பட்டது. அப்போது 'பிரதமர் மோடி வாழ்க', 'பாஜக வளர்க' உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வீடியோவைக் காண