Published : 17 Sep 2019 11:52 AM
Last Updated : 17 Sep 2019 11:52 AM

தமிழக அரசு செயல்பாடற்ற அரசாக இருக்கிறது: சுபஸ்ரீயின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியபின் உதயநிதி பேட்டி

சென்னை

தமிழக அரசு செயல்பாடற்ற அரசாக இருக்கிறது என, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

கடந்த வாரம், சென்னையில் பேனர் விபத்தால் உயிரிழந்த சுபஸ்ரீயின் பெற்றோரை திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்.17) அவர்களுடைய இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து, உதயநிதி செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"நடந்ததை அரசியலாக்க நான் விரும்பவில்லை. இந்த சம்பவம் மிகப்பெரிய தவறு. எந்தத் திருமணத்துக்காக பேனர் வைத்தார்களோ, அந்த திருமணம் முடிந்து மூன்று நாட்களாகியும் பிளக்ஸ் பேனர்களை அகற்றாமல் இருந்திருக்கின்றனர். இதற்குக் காரணமான குற்றவாளியைக் கண்டுபிடித்து நிச்சயம் தண்டனை தர வேண்டும். இன்னொரு முறை இம்மாதிரியான தவறு நடக்கக் கூடாத அளவுக்கு தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளியை விரைவில் கைது செய்ய வேண்டும். சுபஸ்ரீயின் பெற்றோர் சார்பாக நானும் அந்த கோரிக்கையை வலியுறுத்துகிறேன்.

சுபஸ்ரீயின் மரணம் போன்று இன்னொரு மரணம் நடக்கக்கூடாது என சுபஸ்ரீயின் பெற்றோர் என்னிடம் தெரிவித்தனர். மேலும், ஒரு விபத்து நடந்தால் 6 மாதத்திற்கு பேனர்கள் வைக்காமல், அதன்பிறகு வைக்க ஆரம்பித்து விடுவதாகவும், இதனை தலைவரிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். இதனை விபத்து என்று கூட அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சாலை விதிப்படித்தான் சுபஸ்ரீ வாகனம் ஓட்டியிருக்கிறார், லாரி ஓட்டுநர் மீதும் அவர்கள் தவறு சொல்லவில்லை. திருமணம் முடிந்தும் பேனர்களை எடுக்காமல் இருந்ததுதான் தவறு.

3 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேனர் வைக்கக் கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். திமுக நிகழ்ச்சிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது எனவும், அப்படி வைத்தால் அந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை எனவும் தலைவர் கூறியிருக்கிறார்.

சிதிலமடைந்த மின் வயரால் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம்

இந்த அரசு செயல்பாடற்ற அரசாக இருக்கிறது. செய்ய வேண்டிய வேலைகளை செய்யாமல், மக்களுக்கு பாதுகாப்பற்ற அரசாக விளங்குகிறது,"

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x