Published : 17 Sep 2019 11:45 AM
Last Updated : 17 Sep 2019 11:45 AM

நத்தம் அருகே வாகனங்கள் மீது வழக்கு பதிய எதிர்ப்பு; வியாபாரியை துப்பாக்கியால் மிரட்டிய எஸ்.ஐ: நடவடிக்கை கோரி கிராம மக்கள் சாலை மறியல்

நத்தம்

நத்தம் அருகே செந்துறையில் நிறுத்தி வைத்திருந்த வாகனங்கள் மீது விதிமீறல் வழக்கு பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரியின் வீடு புகுந்து துப்பாக்கியைக் காட்டி சப்- இன்ஸ்பெக்டர் மிரட்டியுள்ளார். அவர் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செந்துறையில் போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப் போது விதிகளை மீறியதாக அழகுபாண்டி(30), முருகன்(39), தண்டபாணி(25), சக்திவேல்(35), செல்வகுமரன்(40), ராஜப்பன்(35), வடிவேல்(40) ஆகிய ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோல, கடைகள் முன்பு நிறுத்தி வைத்திருந்த சில வாகனங் கள் மீதும், விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதை அப்பகுதி வியாபாரி செல்வக்குமரன் என்பவர், நிறுத்தி வைத்திருந்த வாகனங்களைப் பிடித்ததாக ஏன் வழக்குப் பதிவு செய்கிறீர்கள்? என வாகனச் சோத னையில் ஈடுபட்ட எஸ்.ஐ. மாத வராஜ் என்பவரிடம் கேட்டுள்ளார். இதற்கு, நான் தூத்துக்குடிக்காரன், அப்படித்தான் வழக்குப் பதிவு செய்வேன், சட்டமா பேசுகிறாய் எனக் கூறி செல்வக்குமரனை எஸ்.ஐ. மாதவராஜ் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த செந்துறை ஊர் முக்கியப் பிரமுகர்கள், போலீ ஸாருடன் வாக்குவாதம் வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். பறிமு தல் செய்த வாகனங்களுக்கு நாளை காலை அபராதம் செலுத்தி மீட்டுக்கொள்வதாகக் கூறிவிட்டு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் செந்துறையில் உள்ள செல்வகுமரனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ், செல்வக்குமரனின் தந்தை ராஜேந்திரனை துப் பாக்கியால் தாக்கி உள்ளார். மேலும் உனது மகன் எங்கே என்று கேட்டு மிரட்டியுள்ளார். பின்னர் வீட்டில் இருந்த செல்வக்குமரனை பிடித்து இழுத்து வந்துள்ளார்.

ஏன் இழுத்துச்செல்கிறீர்கள் என ராஜேந்திரன் கேட்டபோது, அவரது வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார் மாதவ ராஜ்.

சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதால் காயமடைந்த ராஜேந்திரன் சிகிச்சைக்காக செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க் கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த கிராம மக்கள் சப்-இன்ஸ்பெக்டரைக் கண்டித்து நத்தம்-செந்துறை சாலையில் நேற்று காலை மறியல் செய்தனர். தொடர்ந்து கடை அடைப்புப் போராட்டம் நடத்தினர். நத்தம் இன்ஸ்பெக்டர் ராஜாமுரளி பேச்சு வார்த்தை நடத்தியும் பயன் இல்லாததால் திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி வினோத் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்குப் பரிந்துரைப்பதாக உறுதி அளித் ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x