Published : 17 Sep 2019 11:38 AM
Last Updated : 17 Sep 2019 11:38 AM

மாநகராட்சி மருத்துவமனைகளில் இரவு பணியில் மருத்துவர்கள் இல்லை: மருத்துவர் பற்றாக்குறையால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

மதுரை

மதுரை மாநகராட்சியில் மொத்தம் 31 மருத்துவமனைகள் உள்ளன. மாதம் 80 முதல் 100 பிரசவங்கள் நடக்கின்றன. நிதிப் பற்றாக்குறை காரணமாக மாநகராட்சி நிர்வாகம் போதிய எண்ணிக்கையிலான மருத்துவர்களை நியமிக்கவில்லை. அதனால், ஒரு மருத்துவமனைக்கு ஒரு மருத்துவர் என்ற வீதத்தில், 31 மருத்துவமனைகளில் மொத்தம் 31 மருத்துவர்களே பணியில் உள்ளனர்.

காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் இருக்கும் இந்த மருத்துவர்கள்தான் மகப்பேறு, குழந்தைகள் நலன் உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளையும் மேற் கொள்கின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் இந்த மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை. இதனால், இரவு நேரங்களில் பெரும்பாலும் செவிலியர்களே பிரசவம் பார்க்கின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன் இதுபோல் புதூர் மாநகராட்சி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் செவிலியர்கள் பிரசவம் பார்த்தபோது கர்ப்பிணி பெண் சக்திகாளி (22) என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, மாநகராட்சி மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மகப்பேறு சிகிச்சையின் தரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நல ஆர்வலர் வெரோனிகா மேரி கூறியதாவது:

சிக்கலான பிரசவங்களின்போது மகப்பேறு மருத்துவர்கள், குழந்தை நல மருத்துவர், மயக்கவியல் மருத்துவர் மற்றும் செவிலியர் கொண்ட மருத்துவ குழு கட்டாயம் இருக்க வேண்டும் என்று தேசிய சுகாதாரத் திட்டம் வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நடைமுறை மாநக ராட்சி மருத்துவ மனைகளில் இல்லை. சாதாரண பிரச் சினைகளோடு பிரசவத் துக்காக வரும் கர்ப்பிணி களைக்கூட பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். நான்கரை ஆண்டு களில் மாநகராட்சி மருத்துவமனைகளில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு 2,921 கர்ப்பிணிகள் பரிந்துரை செய்யப் பட்டுள்ளனர் என்று கூறினார்.

விளக்கம் ஏற்புடையதா?

கர்ப்பிணி சக்தி காளி உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணையின்போது, சுகப்பிரசவம் என்பதால் மருத்துவர் வரவில்லை என்று புதூர் மாநகராட்சி மருத்துவரும், அங்கு பணியில் இருந்த செவிலியரும் விளக்கம் அளித்துள்னனர். அதை மாநகராட்சி நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சுகாதார அதிகாரி வினோத்ராஜாவிடம் கேட்டபோது, சுகப்பிரசவம் என்றாலும் மருத்துவர்கள் அருகில் இருக்க வேண்டும்.

மாநகராட்சி மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் பகல் பொழுதில் மட்டுமே மருத்துவர் இருப்பார். அவசர சிகிச்சை தேவைப்பட்டால் மட்டுமே மருத் துவர் வருவார். உயிரிழந்த சக்திகாளிக்கு திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 1,000-ல் ஒருவருக்குதான் இதுபோல் ஏற்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x