Published : 17 Sep 2019 11:24 AM
Last Updated : 17 Sep 2019 11:24 AM

ரசாயனத்தை பயன்படுத்தி போலி நெய் தயாரிப்பு; 500 லிட்டர் பறிமுதல்: 7 பேரை பிடித்து விசாரணை

திருப்பூரில் வீடுகளில் தயாரிக்கப்பட்ட போலி நெய்யை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

திருப்பூர்

பாமாயில், டால்டா, ரசாயனத்தைப் பயன்படுத்தி, திருப்பூரில் போலி நெய் தயாரித்து விற்பனை செய்து வந்த 7 பேரை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பிடித்து, அவர் களிடமிருந்து 500 லிட்டர் போலி நெய்யை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி உட்பட புறநகர் பகுதிகளில் டால்டா, பாமாயிலுடன் ரசாயனங்களைக் கலந்து, போலி நெய் தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதி காரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் பி.விஜய லலிதாம்பிகை தலைமை யிலான அதிகாரிகள், அவிநாசி அருகே மங்கலம் சாலையில் வாடகை வாகனத்தில் அமர்ந்தபடி நேற்று முன்தினம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், ரூ.220-க்கு ஒரு லிட்டர் நெய் என விற்று வந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில், திருப்பூர் ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியைச் சேர்ந்த குமார் என் பதும், டால்டா, பாமாயில், ரசாயனப் பொருட்களைக் கொண்டு போலி யாக நெய் தயாரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியில் சோதனை நடத்திய அதிகாரிகள், குமாருடன் சேர்த்து போலி நெய் தயாரித்ததாக 7 பேரை பிடித்தனர். அவர்களது வீடு களில் இருந்து 500 லிட்டர் போலி நெய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக உணவுப் பாதுகாப்பு அலுவலர் விஜய லலிதாம்பிகை கூறும்போது, ‘அந்த குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்ததும் திருமணத்துக்கு 50 லிட்டர் நெய் வேண்டும் எனக் கேட்டோம். முழுத் தொகையும் உடனே தருவதாகக் கூறியதால், ஒருவர் பின் ஒருவராக தங்களிடம் நெய் இருப்பதை ஒப்புக்கொண்ட னர். கடந்த 4 ஆண்டுகளாக போலி நெய் தயாரித்து, புறநகர் பகுதிகளிலுள்ள கடைகள், பேக்கரிகள், கிராமங்களில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

டால்டா, பாமாயில், ரசாயனத் துடன் மதுரையில் இருந்து கொண்டு வரப்படும் ஒருவித விதையையும் சேர்த்து தயாரிக்கின்றனர். இதை உட்கொண்டால் நிச்சயம் உடலுக்கு பிரச்சினைகள் ஏற்படும். கைப்பற்றப்பட்ட போலி நெய் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆய்வு அறிக்கை வந்தவுடன், 7 பேருக்கும் சட்ட ரீதியாக தண்டனை பெற்றுத்தரப்படும். இதற்கு மேல் அவர்கள் போலி நெய் காய்ச்சாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x