

காரைக்குடி
தேர்தல் அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துவிட்டதால் உள்ளாட்சித் தேர்தல் கண்டிப்பாக நடைபெறும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக் குடியில் நடந்து வரும் பாதாள சாக் கடைத் திட்டப் பணியைப் பார்வை யிட்டார். அவருடன் அமைச்சர் பாஸ் கரன், ஆட்சியர் ஜெயகாந்தன், எம்எல்ஏக்கள் ராமசாமி, நாகராஜன், முன்னாள் எம்பி செந்தில்நாதன், நகராட்சி ஆணையர் சுந்தராம்பாள் ஆகியோர் உடனிருந்தனர்.
ரஸ்தா பகுதியில் கட்டப்படும் பாதாள சாக்கடைத் திட்ட சுத்தி கரிப்பு நிலையத்தைப் பார்வை யிட்டபோது, அங்குள்ள கிடங்கில் குப்பையை எரிப்பதால் சிரமமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி.திராவிடமணி தலைமையில் வியாபாரிகள் அமைச்சரிடம், ‘காரைக்குடியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தால் சேதமான 71 சாலை களைச் சீரமைக்காததால் மக்கள் சிரமப்படுகின்றனர்,’ என்றனர்.
தொடர்ந்து அமைச்சர் வேலு மணி செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தில் தினமும் 19 ஆயிரம் டன் குப்பை சேகரமாகிறது. குப்பையை அகற்றுவது சவாலான ஒன்றாக உள்ளது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து வரு கிறோம். காரைக்குடி நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் குழாய் பதிக்கும் பணி 70 சதவீதம், சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது 40 சதவீதம் முடிவடைந்துள் ளது.
சாலையைச் செப்பனிடத் தேவையான நிதி உள்ளது. மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும். மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை மக்கள் ஆர்வமாகச் செயல்படுத்தி வரு கின்றனர். காரைக்குடி கீழ் ஊருணி ரூ.90 லட்சத்தில் தூர்வாரப் பட்டுள்ளது.
தேர்தல் அட்டவணையை உச்ச நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் சமர்ப்பித்துவிட்டதால் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். போக்குவரத்து விதி மீறலுக்கு விதிக்கப்படும் கட்ட ணத்தைக் குறைப்பது குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும், என்று தெரிவித்தார்.